பிறர் செய்யும் சதிகளை தாண்டி
மெய் நம்மை காப்பது
மெய்சிலிர்க் வைக்கிறது
மையாத மெய்
மதுரமாய்
என் அன்பை எட்டு திசைகள் வீசிய பின்பும்
பலரது சாபம் என்மேல்
என் சாயல் பலர் மேல்
காயங்கள் என் மேல்
பாவம் யார் மேல்
மதத்தை காரணம் காட்டியோ
இனத்தை காரணம் காட்டியோ
மொழியை காரணம் காட்டியோ
நாம் முடங்கிவிட கூடாது
முழுமையாக முடியாது
முன்னேற முடியாது