கவவு அகத்திலேயே
கண் காணாமல்
கைகள் பற்றாமல்
உடல்கள் அகத்திடாமல்
உள்ளம் களவாகி
கவவு கொள்ளுதே
உடலே உடைந்தாலும்
உயிரே ஊசலாடினாலும்
உள்ளம் உடையாமல் ஓடும்
அடங்காமல் ஆடும் ஆட்டை அடிக்கும்
இது வேங்கையின் வேட்டை
தன் குழந்தை தாய் பால் குடிக்க
அன்னை விலை பேசுவதில்லை
அரசு கல்விக்கு விலை பேசுவதா ?
அறிவு பால் கொடுப்பது அரசின் கடமை இல்லையா?