காலம் உதிர்கிறது
காதல் உதிரவில்லை
காதல் உயிர்ப்பித்து
காலத்தை சமன் செய்யும்
என்னைப்போல் ஒருவன்
எனக்கு கிடைக்கவில்லை
என்னை தேற்றுவதற்கு
என்னை ஆற்றுவதற்கு
நான் என்னை தேடுகிறேன்
அறிவால் என்னை அரவணைத்து கொள்
அன்பால் என்னை தழுவிகொள்
அமைதியாக வந்து என்னை ஆட்கொண்டு விடு
யாரும் வேண்டாம்
எதுவும் வேண்டாம்
என்று
வாழும் வாழ்க்கையில்
(நான் ஏன் பொறாமை
கொள்ள வேண்டும்)
பொறாமைக்கு இடமேது..
நீ விடும் மூச்சு காற்றில்
உன் மனதை அறிந்துவிடுவேன்
அறிந்தும்
அறியாதவன் போல
அமைதியாக இருக்கிறேன்