Saturday, December 31, 2016

உறவு சொற்கள்

சார் மேடம்
என்னும் வார்த்தைக்குள்
சறுக்கியது
அய்யா அம்மா
அண்ணா தம்பி
அக்கா தங்கை பாப்பா
உறவுச் சொற்கள்


புகழே ஒழிக

மேதகு மாண்புமிகு
மகாத்மா பொன்மனச்செல்வ
புரட்சி திலக
புகழ் வார்த்தைகள் ஒழிக


Friday, December 23, 2016

பனி வேர்வை

பனிக்காற்றின் போதை
உஸ்னமாய் உயிரில் ஊடுருவி
மோக தணலாய் கொதித்து
காம நிலைகளில்
தேகமெங்கும் வேர்வையாய் வழிகிறது




Thursday, December 22, 2016

புது சிந்தனைகள்

மாற்றி சிந்திக்க தொடங்கும் போதுதான்
புது சிந்தனைகள் பிறக்கிறது
புதிய சிந்தனைகளில் இருந்து தான்
மாற்றங்கள் பிறக்கிறது


Wednesday, December 21, 2016

விடுமுறை வாழ்வு 2

சனி ஞாயிறுகளிலும்
பண்டிகை காலங்களிலும்
கிடைக்கும் விடுமுறையை நம்பியே
பலர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்
இன்னும் சொல்லப்போனால்
வாழ்கையையே தவணை முறையில்
விடுமுறைகளில் தான் வாழ்ந்து பழகுகிறார்கள்


Saturday, December 17, 2016

தக்கிடதிமி தா

தான தக்கிடதிமி தாளம்
வாழ்வே தறிகெட்ட ஓலம்
தான தக்கிடதிமி கானம்
சுரமே இசைத்திடும்
சுருதி சேரா பாடல்
தான தக்கிடதிமிதா
தான நானா தக்கிடதிமி தா


புலம்பல்

புலம்பல் கூடப் பழக்கம் தான்
பழகிகொள்லாமல் இருக்க பழகுங்கள்
மாறாக
நன்றிகளையும் பாராட்டுகளையும்
பிறருக்கு தெரிவித்து பழகுங்கள்


Tuesday, December 13, 2016

மீண்டும் தொடர்கிறாள்

அவளது படிமங்களை
நான் அழித்துவிட்டேன்
என் நினைவுகளை
அவள் ஏன் இன்னும் விட மறுக்கிறாள்
அது என் மனதினில் மீண்டும்
கோலம் வரையப் பார்க்கிறது


Friday, December 9, 2016

வாய் வம்பு

உன் வாய் (இதழ்கள்) மட்டும் போதும்
முத்த வம்புகள் செய்து பார்க்க
வார்த்தைகள் வேண்டாம்


Tuesday, December 6, 2016

அன்பே தழைக்கும்

அழகு அழியும்
ஆணவம் அழியும்
அகந்தை அழியும்
அதிகாரம் அழியும்
அன்பே தழைக்கும்





Sunday, December 4, 2016

வாய்ப்பு

இது தான் என் முதல் வாய்ப்பு
என் வெற்றிக்கான முதல் படி
இதற்காகத் தான் இத்தனை ஆண்டுகள் காத்து இருந்தேன்
அது இறுதியாக இன்று கை கூடி இருக்கிறது
இதை இதைத்தான் எதிர்ப்பார்த்து இருந்தேன்
இந்த வாய்ப்பு கடும் உழைப்பின் பலன்
இதோ இதுதான் அந்த வாய்ப்பு


கார்பன் வாழ்க்கை

கார்பன் தாள் (பேப்பர்)
வாழ்க்கை வாழாதே
சாயம் வெளுத்ததும்
தூக்கி எறியப்படுவாய்


Thursday, December 1, 2016

கறுப்பு வாழ்கையில்

கடைசில என்கிட்டே கறுப்புப்பணமும் இல்லை
கறுப்புத் தங்கமும் இல்லை ..
வாழ்க்கை மட்டும் கறுப்பா இருக்கு
கறுப்பு வாழ்கையில்


பங்கு சந்தை

ஷேர் மார்க்கெட்டே ஒரு சூதாட்டம் போலத்தான்
அறிவும் அதிர்ஷ்டமும் கலந்தது

(ஷேர் மார்க்கெட்டே - பங்கு சந்தையே)

------------------------------------
பங்கு சந்தையில் பங்குமில்லை
பங்கத்தில் பங்குபோடவும் யாருமில்லை




கதை காதல்கள்

சற்றுமுன் முடிந்த காதல் கதைகள்
வேண்டுமா அல்லது இன்னும்
சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் புது காதல் கதைகள் வேண்டுமா.
இப்படி இந்த காதல் உலகிலே எத்தனையோ காதல் கதைகளை கடந்து வந்துவிட்டேன் .



துணிவு

உன் துணிவை யாரும் இங்கு அடக்கவில்லை,
நீ தான் துளியும் துணியாமல் இருக்கிறாய்
--------------------------------------------------------------

வெற்றியை தேடுகிறாய் ஆனால் அதற்காக
துளியும் துணியாமல் இருக்கிறாய்


Tuesday, November 29, 2016

திசை அறியா பயணம்

துடுப்பு இல்லாத படகு
காற்று வீசும் திசைகளில்
அலைகளோடு பயணப்படுகிறது .
காற்றின் திசையில்
கரை வந்தால் சரி இல்லையேல்
காணாமல் போகும் கடல் திசையில்


Saturday, November 26, 2016

கவிதையின் தவம்

திறக்காத புத்தகத்தில்
யாரும் படிக்காத கவிதை ஒன்று
இதழ் விரித்து
முதல் முத்தத்துக்காக
தவமாய் காத்து கிடக்கிறது


Thursday, November 24, 2016

கனவை கரைத்தல்

 கனவு காண்பதை கலைத்தால் போதும்
அதுவே விழிப்பில் கரைந்து அஸ்தியாகிவிடும்


Tuesday, November 22, 2016

சில சொந்தம்

கனவுகள் எனக்கு மட்டுமே  சொந்தம்
கருத்துக்கள் உங்களுக்கு (பொதுமக்களுக்கு) மட்டுமே சொந்தம்
கொள்கைகள் கட்சிகளுக்கு மட்டுமே சொந்தம்
கொள்ளையில் வரும் லாபங்கள் அதிகாரம் படைத்தவர்களுக்கு மட்டுமே சொந்தம்


Saturday, November 19, 2016

ஆண்கள் தினம்

இது ஒரு வழக்காமான நாள் தான் எங்களுக்கு
ஆனால் அக்கா தங்கைகள் தோழிகள் காதலிகள்
இந்த நாளை சிறப்பித்து வாழ்த்தும்போதுதான் தெரிகிறது
இன்று ஆண்கள் தினமென்று.
மாறாக
எங்களை நாங்களே வாழ்த்திக்கொள்வதில்லை
எங்களுக்கு
இன்று வெறும் 19 நவம்பர் 2016 அவ்வளவுதான்.


நீட்சியீன் நாயகன்

நீங்கள் என்னை நிராகரித்தீர்கள்
நான் நீர்த்துபோகவில்லை
நிந்தைகளை கடந்து
நீந்தி வந்திருக்கிறேன்

நித்திரைகளை தொலைத்து
நிம்மதியான வாழ்வை
நித்தம் தர வந்திருக்கிறேன்
நீட்சியீன் நாயகனாக


மறு உலகம்

தூக்கம் வருகிறது
கண்களை மூடவே பயமாக இருக்கிறது
எங்கே கனவு உலகம் விழித்துகொள்ளுமோ என்று

=======================================
தூக்கம் வருகிறது
கண்களை மூடினால் கனவு உலகம் விழித்துகொள்ளுமோ
என்று மிகவும் பயமாக இருக்கிறது



Friday, November 18, 2016

பக்குவமான பாதை

எனக்கான பாதையே என் முன்னே கிடையாது
மிகுந்த சிரமத்துக்கு கிடையே
நான் தான் அதை உருவாக்குகிறேன்
அந்த பக்குவமான பாதையில் நீங்களும்
என்னை நம்பி பின் தொடரலாம்  (பயணிக்கலாம்)
அதில் இடர்கள் கிடையாது


Thursday, November 17, 2016

நமக்கு ஏன் வம்பு

நமக்கு ஏன் வம்பு
என்று நீ ஒதுங்குமிடத்தில் தான்
உனக்கான துன்பம் கருதரிக்கிறது
அது சமுகத்தில் பிறந்து வளர்ந்து
நடை பயின்று
உன் வாசல் வரும்
அப்போது உணர்வாய்

அந்த அன்றைய                                                      (அன்றைய அந்த
நமக்கு ஏன் வம்பு                                                        நமக்கு ஏன் வம்பு
அது நமக்கான வம்பு என்று                                அது நமக்கான வம்பு என்று)
-------------------------------------


கறுப்புப்பண கப்பல்

கரைகளில்
கலங்கரை விளக்கங்கள்
இருக்கும் வரை
கறுப்புப்பண கப்பல்கள்
தரை தட்டாது


Monday, November 14, 2016

வெளியில் மனிதநேயம்

மதமும் மார்க்கமும் மனதோடு இருக்கட்டும்
மனிதநேயம் பொது வெளியில் இருக்கட்டும் .


Sunday, November 13, 2016

கள்ள பணம்

கள்ளநோட்டும் ஒழியலை
கருப்பு பணமும் ஒழியலை
கை செலவுக்கு வைத்திருந்த பணம் தான் ஒழிந்தது.


உங்கள் வட்டம்

உங்களுக்கு உங்கள் வட்டம் மட்டும் தான் பழக்கம் .
பழகிய வட்டமாக இருந்தாலும்
ஒருமுறை அதனை விட்டு வெளியே வந்து பாருங்கள் ..
உங்கள் வட்டம்
இவ்உலகில் எவ்வளவு சிறியது என்று தெரியும்.


Thursday, November 10, 2016

கருத்துரிமை

கருத்துக்கு கம்பிகள் தடை இல்லை - கருத்துரிமை சட்டத்தில்


Wednesday, November 9, 2016

கைமாத்து

இன்றுமுதல்
செல்லாத 500,1000 ரூபாய்களை
கைமாத்த
வழி இல்லாமல்
100 ருபாய்
கைமாத்து வாங்க
வட்டிக்குவிடும்
நபர்களை  தேடுகிறேன்


Tuesday, November 8, 2016

என்னை எண்ணுகிறேன்

என்னைப்பற்றி தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை
என்மேல் என்னையன்றி வேறொன்றுமில்லை
என்னை எண்ணம்போலவே செதுக்கி இருக்கிறேன்



Saturday, November 5, 2016

காலம் கடத்துகிறேன்

உதறி தள்ளுவதை போல் ஒரு நாளை தள்ளுகிறேன்
உடை மாற்றுவதை போல் ஒரு வாரத்தை மாற்றுகிறேன்
உறங்கி விழிப்பதை போல் ஒரு மாதத்தை கடத்துகிறேன்
ஊருக்காய் போடுவதை போல் ஒரு வருடத்தை போக்குகிறேன்



மவுன ராகம்

பாடல்களில் இது தலை கானம் (தான்)
தனிமையில் பாடும் ஒரு ராகம் (தான்)
தாளங்களில் அது மவுன ராகம் (தான்)


Thursday, November 3, 2016

வாய்பூட்டு

வேண்டாத வம்பு தும்புகளை தவிர்க்க
வசவுகளை வசை வீசாமல் தவிர்க்க

வேண்டும் வாய்க்கு ஒரு பூட்டு



Tuesday, November 1, 2016

மகிழ்ச்சியின் விலை

ஒவ்வொரு மகிழ்ச்சிக்கும் ஒரு விலை இருக்கிறது ..
விலை இல்லா மகிழ்ச்சியும் இருக்கிறது
அது நம் தனிமையில் மட்டும் தான் இருக்கிறது



Monday, October 31, 2016

ஆயிரத்தில் ஒரு இரவு

யார் அவள் ?
ஆயிரம் இரவுகளில் அவள் ஒருத்தி
யாருக்கு தெரியும்
அதில் எந்த இரவு அவளுக்கு சொந்தமென்று
இருந்தபோதும்
ஆயிரத்தில் ஒரு இரவு
அவளுக்குகென சொந்தமானது
அந்த ஓர் இரவு .
அது ஆயிரத்தில் ஒரு இரவு .


வாழ்வின் வழி

வாழவே வழி இல்லாத போதும்
வாழ்வதை போல் நடித்து கொண்டிருக்கிறோம்
வாழ்வின் வலிகளை சுமந்துகொண்டு



Tuesday, October 25, 2016

தனி கருத்து

அபத்தமாக நியமான
என் தனி கருத்தை கொண்டு
நான்  மட்டும்  தனியாக
கம்பு  சுத்துகிறேன்
யாரும்  எனக்கு  எதிராக
வாள்வீசாத போது


மாறும் நிலைகள்

ஒரு நிலையில் இருக்கும்போதே
அந்த நிலை  குறித்து
பதிவு செய்துவிடுகிறோம்
பிறகு
வேறு நிலைக்கு  சென்ற  பின்
முன்பு  பதிவு  செய்த  நிலையை
அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது
மிகவும்  வேடிக்கையாவும்
அபத்தமாகவும்  தெரிகிறது

என்றும் மாற்ற விரும்பாத நிலைகளும் உண்டு
என்றும் மாறாத நிலைகளும் உண்டு

என்றும் மாற்ற முடியாத நிலைகளும் உண்டு
மாறும் நிலைகளில்



செடிவெடி

செடிவெடி
வெடிக்கு பதில் செடி
மாசுக்கு பதில் தூய காற்று
சத்தமில்லா
மாசு இல்லா
தீப ஒளியை
கொண்டாடுங்கள்


Monday, October 24, 2016

தேடல் மனது

உண்மையில் ஒருவகை உற்சாகமும் வெகுளித்தனமும் இருக்கும்
பொய்களில் ஒருவகை நிதானமும் படபடப்பும் இருக்கும்
எதுவாகிலும்
அதனை பொறுமையுடன்
கேட்டறிகிற மனதினில்
எதோ  ஒருவகை தேடலிருக்கும்



அழகுகளை தேடுகிறோம்

சில அழகுகளை
தூரத்தில் இருந்து பார்த்து
இரசிக்க மட்டும்தான்  முடிகிறது
பல அழகுகளை பார்க்க கூட முடிவதில்லை
அழகுகளை மட்டுமே தேடும் உலகில்
எவ்வளவு வஞ்சகமான வாழ்வியல் முறை இது


மதம் கொண்ட மனங்கள்.

மதத்துக்கு
மாறாக
மதமல்ல
மார்க்கம்
மதமல்ல
வாழ்வியல் முறை
மதமல்ல
கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுதல்
என்கிறது
மதம்
கொண்ட
மனம்  
(மனங்கள்)



மஞ்சள் மலரே

கூந்தலில் ஏறி நிற்கும் சாமந்தியும்
நெற்றியில் இட்ட சந்தனமும்
தோள்களில் வசிக்கும் ஜவ்வாதும்
மார்புகளில் தவழ்ந்தாடும் மஞ்சளும்
மாறனை கவர்ந்திழுகிறது
மதிமயங்குகிறேன்
மஞ்சள் மலரே


சோதனைகளை சோதித்தவன்

இளமையில்
வறுமையை அள்ளி பூசி
உறவையும்
நட்பையும்
காதலையும்
காமத்தையும் துறந்து
வாழ்வது சாபம்
வாழ்வில்  ஒருமுறைதான்
இதை பரிசோதிக்கமுடியும்
அவைகள் என்னை சோதிக்க
இளமையுடன் சேர்த்து
அதையும் கடந்துவிட்டேன்
இனி மீதம்
என்ன இருக்கு
என்னை  சோதிக்க .



தெரியாத சங்கதிகள்

தெரிந்த  சங்கதிகளே
பிசிர் தட்டும் போது
தெரியாத  சங்கத்திகளை
நான்  எப்படி  பாடுவது
பல்லவிகள் சரணத்தில்
பரியாசம் செய்து
பல்லிக்குமல்லவா


இறவா இளமை

இளம்வயதிலே இறப்பவர்கள்
நம்மிடையே
இளமையான நினைவுகளை
விட்டு சென்றுவிடுகிறார்கள்
என்றும் மாறாத
இளமையான தோற்றத்திலே 

(முதுமை என்பதே அவர்களுக்கு கிடையாது)


Friday, October 21, 2016

மாய மங்கை மாயை

மாய உலகம்
மங்கை வடிவில் வந்து
என் மானுடத்தை சோதிக்கிறது
மார்கழியும் தீப்போல் சுடுகிறது
மாங்கனிகளும் மாராப்பால் மூடி ஓடி ஒளிகிறது
மாசில்லாத மனம் இது என்பதால்
மாயைகளுக்கு மதிமயங்காமல் அந்த
மாயையையே மதிமயங்க செய்துவிடுகிறது






Wednesday, October 19, 2016

சந்தித்த முத்தங்கள்

குறுந்தகவல்களில்
அவள் கொடுத்து அனுப்பிய முத்தங்கள்
போதவில்லை
பிறகு தொலைபேசி அழைப்புகளில்
கொடுக்கத் தொடங்கினாள்
கொஞ்ச நாள் கழித்து
முதல் முறையாக
நேரில் சந்தித்த போது
கொடுக்கத் தயங்கினாள்
ஏன் என்னை பிடிக்கவில்லையா என்றேன்
மாறாக அவளும் அதே கேள்வியை கேட்டாள்
மாற்றி கொண்டோம்
கொடுக்க காத்திருந்த
முத்தங்களை


Monday, October 17, 2016

தேவை இல்லாத தேடல்

எது எல்லாம் நமக்கு தேவைப்படுமென்று
பார்த்து பார்த்து சேர்த்து வைக்கிறோமோ
அவை எல்லாம்
ஒரு காலத்துக்குமேல்
நமக்கு  தேவையில்லாமல்
போய்விடுகிறது


Popular Posts

Labels

காதல் ஹைக்கூ ஹைக்கு Siru Kavithaigal காதல் சிந்தனை சாதி Motivational [(Aunty) National] நேஷனல் கவிதைகள் அகத்தில் வாழ்பவள் அங்கீகாரம் அடமான வாழ்வு அணுகும் தனிமை அது நீ தான் அன்பின் இழப்பு அன்பின் காற்று அன்பு காற்று அன்பு முத்தம் அன்பே தழைக்கும் அன்பே லாபம் அன்பேன ரசித்தது அன்பை வெளிபடுத்துங்கள் அபத்தமானவன் அப்பாவிடம் பேச ஆசை அறிமுகமாகிறேன் அறிவுரை அற்புத உலகம் அளவில்லா அளவு அழகுகளை தேடுகிறோம் அழகை இரசியுங்கள் அழியாத உரையாடல்கள் அவன் அவள் அவளுக்காக அவள் கவிதைகள் ஆசை ஆசைகள் அடங்காது ஆடி காய்ச்சல் ஆணவ காதல் ஆண்கள் தினம் ஆண்டது விழும் ஆன்மீக அறிவியல் ஆயிரத்தில் ஒரு இரவு ஆயிரத்தில் ஒருவன் ஆறுதல் பரிசு ஆழ்ந்த நோக்கம் இணைய விட்டில்கள் இணையில்லா துருவம் இது அதுவாகிலும் இன பேதம் இயல்பில் நிம்மதி இரசிக்க தேடுகிறேன் இரவு பொழுது இருக்கம் இறவா இளமை இலக்கை நோக்கி இளைஞர் சிறகுகள் இழக்கிறிர்கள் இவ்வாழ்வு ஈகோ உங்கள் வட்டம் உன் சாயல் தான் உன்னிடம் தொலைந்துவிட்டேன் உறவு உறவு சொற்கள் ஊடல் கவிமழை எதிர்பார்க்கிறேன் எதையோ எதிர்பாக்கிறார்கள் எனக்கான பாராட்டு எனக்குள் பல வழிகள் எனக்கென கவிதை எனதுலகம் என் அப்பாவுக்கு என் உயிரே என் கர்ஜனை என் காதலி என்ன என்றது என்னை தொடாதே என்னை உனக்கு தெரியும் என்னை எண்ணுகிறேன் என்னை மறந்துவிடு என்னை வைத்தேன் எழுத்தில் வன்மம் ஏகாந்த நிலை ஏதும்மில்லை ஏதோ தேடல் ஏமாற்ற பயணம் ஒதுங்கிய கூட்டம் ஒன்னுக்கு விலை ஒன்றாக ஒருதலை காதல் ஒரே நிகழ்வு ஒற்றுமையுடன் வாழலாம் ஒளி சுடர் ஒழுங்கின் ஒழுக்கம் ஓரக்கண்ணால் ஓர் ஆசை ஓர் இரவு கூத்து கடல் உயிர்கள் கட்டில் காத்து கிடக்கிறது கட்டுக்குள் வாழு கண்ணாடி கவிதை கண்ணால கவுத்துப்புட்ட கண்ணி நான் கதை காதல்கள் கதை சொல்ல நேரமில்லை கனவின் வழி கனவிலும் நிஜத்திலும் கனவுகளாய் கனவை கரைத்தல் கன்னிக் காளையர் கரு கரையுமோ (கரையும் கரு) கருங்குழலே கருத்து மறுப்பு கருத்துரிமை கரை சேரவே கறுப்பு வாழ்கையில் கறுப்புப்பண கப்பல் கற்பனை ரசனை கலப்பு திருமணம் கலாச்சாரம் கலை இனிக்கிறது கல்லாத கையளவு கள்ள பணம் கள்ள மனம் கள்ளம் இல்லா உள்ளம் கள்வனின் காதலே கழுகின் கருணை கவலை குப்பை கவிதை இரவு கவிதை கனவு கவிதையின் தவம் காதலி இல்லா இன்பம் காதலில் கருணை காதலில் கரைகிறேன் காதல் அற்றவளா ? காதல் கசக்கிறது காதல் கண்கள் காதல் தேடும் ஊடல் காதல் பிறப்பு காதல் வகைகள் காதல் வரவில்லையே கானல் கண்ணீர் காபி காதலி காம தாகம் காமாயணம் காரியமானவள் கார்பன் வாழ்க்கை காற்றுக்கு வேலி காலதாமத புரிதல் காலத்தின் கட்டாயம் காலம் கடத்துகிறேன் கீதம் வரைந்த முகம் கூர் புத்தி கெஞ்சல்கள் கேன கோழிகள் கேலி சாலி கேள்விகளால் கேள்விகளுக்குள் வாழ்வு கைமாத்து கொய்த மலரின் விலை கோடை பூக்கள் சங்கேத செய்தி சந்தித்த முத்தங்கள் சமய சாரம் சித்தனின் பக்தி சிந்தித்து மடை போடு சிறந்த கவிஞன் சிறந்த சமத்துவம் சிறு கவிதைகள் சில சொந்தம் சுய இன்பம் செடிவெடி செம வெயில் இன்று செயலே அன்பு செல்வோர் செல்வார் சொங்கி வீரம் சொல்லாத கதைகள் சோதனைகளை சோதித்தவன் சோலை சொல் ஜாதி வெறி வண்டி டிரெண்டிங் லிஸ்ட் தக்காளி தோட்டா தக்கிடதிமி தா தடமான வாரலாறு தடையம் தட்டச்சு வடு தண்டனையா சட்டம் தனி கருத்து தனி காட்டு ராஜா தனிமை பொழுது தன் கொள்ளை தல தலி தலைகனம் கனம் தலைமை தலைவியின் யுக்தி தவறாதே தாமரை நிலவே தாயம் நான் தாய் மனசே தேசம் திசை அறியா பயணம் திருநங்கை திருப்பி அடி துணிவு துணை துருவ திசைகள் துரோக காரணியமானேன் தெரியாத சங்கதிகள் தேடல் மனது தேடி நாடி தேடு காட்டாத தேவை இல்லாத தேடல் தொடரும் சாதி தொட்டால் தீட்டு நடிப்பு கண்காணிப்பு நன் பூ செண்டுகள் நமக்கு ஏன் வம்பு நமக்குள் பரம் நம் முத்தங்கள் நம்பிக்கை கொள் நல்ல வேசி நல்லவன் கெட்டவன் நாகரிக அநீதி நாடக காதல் நாணிய மலர் நான் இல்லை நான் தூங்கமாட்டேன் நான் நான் டா நிகழும் பொழுதை நிறை செய் நித்தம் நான் நினைவலைகளை நினைவு நினைவுகள் நிம்மதி நாடி நிர்வாணம் நீங்கா நினைவாகிறாள் நீட்சியீன் நாயகன் நீயாக நானாக நேச வாசிப்பு பக்குவமான பாதை பங்கு சந்தை பசி அதனை ரசி பசி கனவு படுகுழி படைப்பின் சுவடு படைப்பிலக்கணம் பதில் தேடும் பாதைகள் பனி வேர்வை பலனற்ற கடமை பழகியதே பழமை புதுமையினுள் பாடம் கற்கிறேன் பாராட்டுகள் படும்பாடு பார்வை ஒன்றே போதும் பார்வையாளர்கள் நாகரிகம் பாவப்பட்ட பாவை பாவையில்லா பயணம் பிட்ச்சை வாழ்வு பின் வரும் நினைவு பின்முன் பிழைகள் புகழே ஒழிக புது சிந்தனைகள் புத்தாண்டு வாழ்த்துகள் புரட்சி பதவிகள் புரியா சந்திப்பு புரியாதப் பேச்சு புலம்பல் பூக்களின் சுமை பூக்கள் நனைகிறது பூஜையும் படையலும் பெண் விடுதலை பெறுகிறேன் தருகிறேன் பொம்மை விரும்பிகள் பொய் முக நூல் பொறுப்பு இல்லாதவன் போகி கழிதல் போக்கத்தவன் நான் போதையின் சுபாவம் போராட்ட பக்கங்கள் மகிழ்ச்சியின் விலை மஞ்சள் மலரே மதம் கொண்ட மனங்கள். மனசு என்பது என்ன மனம் வீசு முல்லையே மன்னித்து விடு மன்னிப்பு பிட்ச்சை மரண நச்சு பா மரணப் பயணம் மறு உலகம் மறு வாழ்வு மறுமை கனவு மவுன ராகம் மவுனப் பாடல் மானுட சாதி மானுடமே மாய மங்கை மாயை மாறா நிகழ்வுகள் மாறும் நிலைகள் மிகும் மோகம் மிதப்பில் மீண்டும் தொடர்கிறாள் முகநூலில் முகமூடிகள் முகவரி தொலைத்தேன் முட்டு சந்து முதுகில் குத்துகள் முத்த சேமிப்பு முத்தக்காரி முன்னாள் காதலன் முலைகளை காட்டு முள் சுட்டது மூண்ணூறு மைல் இறுமாப்பு மூளையில் சுடு மெய் ஞானம் மை பொழிதல் மொழி யுகம் கடந்த பெண் ரசனை ரசிகன் லாபம் பாவம் வண்ணம் வயல் பலி வரலட்சுமி விரதம் வரலாற்று சாலைகள் வலியும் வழியும் வாய் வம்பு வாய்பூட்டு வாய்ப்பு வாழவிடு வாழும் வாழ்த்துகள் வாழ்க்கை சக்கரம் வாழ்வின் வழி விடியல் தேடல் விடுமுறை வாழ்வு விடுமுறை வாழ்வு 2 விட்டு சென்றவர்கள் விட்டுவிட்டாள் விதி தாண்டும் மதி விலை மகன் வீட்டுக்காரி சுகமே வெளியில் மனிதநேயம் வேட்க உணர்வுகள் வேற்று கிரக தொடர்பு வேற்றொரு ஒருதலை காதல் வைரம்