Monday, October 31, 2016

ஆயிரத்தில் ஒரு இரவு

யார் அவள் ?
ஆயிரம் இரவுகளில் அவள் ஒருத்தி
யாருக்கு தெரியும்
அதில் எந்த இரவு அவளுக்கு சொந்தமென்று
இருந்தபோதும்
ஆயிரத்தில் ஒரு இரவு
அவளுக்குகென சொந்தமானது
அந்த ஓர் இரவு .
அது ஆயிரத்தில் ஒரு இரவு .


வாழ்வின் வழி

வாழவே வழி இல்லாத போதும்
வாழ்வதை போல் நடித்து கொண்டிருக்கிறோம்
வாழ்வின் வலிகளை சுமந்துகொண்டு



Tuesday, October 25, 2016

தனி கருத்து

அபத்தமாக நியமான
என் தனி கருத்தை கொண்டு
நான்  மட்டும்  தனியாக
கம்பு  சுத்துகிறேன்
யாரும்  எனக்கு  எதிராக
வாள்வீசாத போது


மாறும் நிலைகள்

ஒரு நிலையில் இருக்கும்போதே
அந்த நிலை  குறித்து
பதிவு செய்துவிடுகிறோம்
பிறகு
வேறு நிலைக்கு  சென்ற  பின்
முன்பு  பதிவு  செய்த  நிலையை
அந்த நிலையில் இருந்து பார்க்கும்போது
மிகவும்  வேடிக்கையாவும்
அபத்தமாகவும்  தெரிகிறது

என்றும் மாற்ற விரும்பாத நிலைகளும் உண்டு
என்றும் மாறாத நிலைகளும் உண்டு

என்றும் மாற்ற முடியாத நிலைகளும் உண்டு
மாறும் நிலைகளில்



செடிவெடி

செடிவெடி
வெடிக்கு பதில் செடி
மாசுக்கு பதில் தூய காற்று
சத்தமில்லா
மாசு இல்லா
தீப ஒளியை
கொண்டாடுங்கள்


Monday, October 24, 2016

தேடல் மனது

உண்மையில் ஒருவகை உற்சாகமும் வெகுளித்தனமும் இருக்கும்
பொய்களில் ஒருவகை நிதானமும் படபடப்பும் இருக்கும்
எதுவாகிலும்
அதனை பொறுமையுடன்
கேட்டறிகிற மனதினில்
எதோ  ஒருவகை தேடலிருக்கும்



அழகுகளை தேடுகிறோம்

சில அழகுகளை
தூரத்தில் இருந்து பார்த்து
இரசிக்க மட்டும்தான்  முடிகிறது
பல அழகுகளை பார்க்க கூட முடிவதில்லை
அழகுகளை மட்டுமே தேடும் உலகில்
எவ்வளவு வஞ்சகமான வாழ்வியல் முறை இது


மதம் கொண்ட மனங்கள்.

மதத்துக்கு
மாறாக
மதமல்ல
மார்க்கம்
மதமல்ல
வாழ்வியல் முறை
மதமல்ல
கொள்கை கோட்பாடுகளை பின்பற்றுதல்
என்கிறது
மதம்
கொண்ட
மனம்  
(மனங்கள்)



மஞ்சள் மலரே

கூந்தலில் ஏறி நிற்கும் சாமந்தியும்
நெற்றியில் இட்ட சந்தனமும்
தோள்களில் வசிக்கும் ஜவ்வாதும்
மார்புகளில் தவழ்ந்தாடும் மஞ்சளும்
மாறனை கவர்ந்திழுகிறது
மதிமயங்குகிறேன்
மஞ்சள் மலரே


சோதனைகளை சோதித்தவன்

இளமையில்
வறுமையை அள்ளி பூசி
உறவையும்
நட்பையும்
காதலையும்
காமத்தையும் துறந்து
வாழ்வது சாபம்
வாழ்வில்  ஒருமுறைதான்
இதை பரிசோதிக்கமுடியும்
அவைகள் என்னை சோதிக்க
இளமையுடன் சேர்த்து
அதையும் கடந்துவிட்டேன்
இனி மீதம்
என்ன இருக்கு
என்னை  சோதிக்க .



தெரியாத சங்கதிகள்

தெரிந்த  சங்கதிகளே
பிசிர் தட்டும் போது
தெரியாத  சங்கத்திகளை
நான்  எப்படி  பாடுவது
பல்லவிகள் சரணத்தில்
பரியாசம் செய்து
பல்லிக்குமல்லவா


இறவா இளமை

இளம்வயதிலே இறப்பவர்கள்
நம்மிடையே
இளமையான நினைவுகளை
விட்டு சென்றுவிடுகிறார்கள்
என்றும் மாறாத
இளமையான தோற்றத்திலே 

(முதுமை என்பதே அவர்களுக்கு கிடையாது)


Friday, October 21, 2016

மாய மங்கை மாயை

மாய உலகம்
மங்கை வடிவில் வந்து
என் மானுடத்தை சோதிக்கிறது
மார்கழியும் தீப்போல் சுடுகிறது
மாங்கனிகளும் மாராப்பால் மூடி ஓடி ஒளிகிறது
மாசில்லாத மனம் இது என்பதால்
மாயைகளுக்கு மதிமயங்காமல் அந்த
மாயையையே மதிமயங்க செய்துவிடுகிறது






Wednesday, October 19, 2016

சந்தித்த முத்தங்கள்

குறுந்தகவல்களில்
அவள் கொடுத்து அனுப்பிய முத்தங்கள்
போதவில்லை
பிறகு தொலைபேசி அழைப்புகளில்
கொடுக்கத் தொடங்கினாள்
கொஞ்ச நாள் கழித்து
முதல் முறையாக
நேரில் சந்தித்த போது
கொடுக்கத் தயங்கினாள்
ஏன் என்னை பிடிக்கவில்லையா என்றேன்
மாறாக அவளும் அதே கேள்வியை கேட்டாள்
மாற்றி கொண்டோம்
கொடுக்க காத்திருந்த
முத்தங்களை


Monday, October 17, 2016

தேவை இல்லாத தேடல்

எது எல்லாம் நமக்கு தேவைப்படுமென்று
பார்த்து பார்த்து சேர்த்து வைக்கிறோமோ
அவை எல்லாம்
ஒரு காலத்துக்குமேல்
நமக்கு  தேவையில்லாமல்
போய்விடுகிறது


Sunday, October 16, 2016

முன்னாள் காதலன்

அவள்
ஆளை மாற்றி  சென்றாலும்
அவனை  மறந்து  செல்ல  முடியாது

அதுபோல் அவனும் காத்திருப்பான்
ஆகவே  எப்போது வேண்டுமென்றாலும்
அந்த  பெண்
அவனுடனான உறவை புதுபித்து  கொள்ள  முடியும்.
அதற்க்கான  வாசல்  கதவை
அவன்  எப்போதும்  திறந்து  வைத்திருப்பான்
அவனே உண்மையான முன்னாள்  காதலன்


யுகம் கடந்த பெண்

தான் விரும்பிய
ஒரு பெண்ணை மறக்க
ஒரு வருடம் போதுமா ?
அல்லவே
ஒரு யுகம் போதாது
அவன் பிணத்தை
மண் தின்ற போதிலும்
அவன் நினைவுகள்
அவளை சுற்றியே
காற்றாக               (ஆவியாக)
வலம் வரும்


ஆணவ காதல்

ஆள் தெரிந்து காதலிப்பது
ஆளத் தெரிந்தவர்களை காதலிப்பது
ஆழம் பார்த்து காதலிப்பது
ஆஸ்தி இழந்தால்
ஆளை மாற்றி காதலிப்பது
ஆள் பார்த்து
ஆழம் பார்த்து
ஆளை மாற்றி
கர்வத்தோடு
காழ்புணர்ச்சியோடு
பொறாமை
பேராசையோடு
காதலிப்பது
ஆணவ காதல்


Thursday, October 13, 2016

நல்லவன் கெட்டவன்

உள்ளுக்குள்ளே கெட்டவனாகவும்
வெளியே நல்லவனாகவும்
நடிப்பது
ஏமாற்றுபவர்களின்
பொழப்பு (பிழைப்பு)
வெளியே கெட்டவனாகவும்
உள்ளுக்குள்ளே நல்லவனாகவும்
இருப்பது
விட்டுக்கொடுப்பவர்களின்
நடிப்பு
உள்ளேயும் வெளியேயும்
நல்லவர்களாக
இருப்பது
உண்மையானவர்களின்
சிறப்பு


Sunday, October 9, 2016

பழகியதே

பாராட்டுகளும் பரிவட்டங்களும்
புதிதல்ல
பூரிப்புகளும் புகழ்ச்சிகளும்
புதிதல்ல
பழகியவர்கள் பகையானதும் 
புதிதல்ல
பகையானவர்கள் பழகியதும்
புதிதல்ல
புதிதாக புது உணர்வுகளை 
பழகிக் பார்க்க இனி ஏதுமில்லை
எல்லாம் பழகியதே


Saturday, October 8, 2016

என்னை வைத்தேன்

இல்லாத பிள்ளைக்கு பெயர் வைத்தேன்
காதல் சொல்லாத காதலிக்கு சிலை வைத்தேன்

உடன் வாராத உறவுக்கு உள்ளம் வைத்தேன்
நன் நாடாத நட்புக்கு படையல் வைத்தேன்

அரும்பாத மனதிற்கு விலை வைத்தேன்
கடல் சேராத ஆற்றிற்கு கண்ணிர் வைத்தேன்

மண் போகாத கனவுகளுக்கு காதல் வைத்தேன்
விண் போகாத உடலுக்கு மாலை வைத்தேன்



Friday, October 7, 2016

மானுடமே

பிறப்பிலும் இறப்பிலும்
வேற்றுமையில்லை
மானுடமே

இங்கே
உயர்ந்தவனுமில்லை
தாழ்ந்தவனுமில்லை
மானுடமே

வேற்றுமை துறந்து
ஒற்றுமை தழைத்திட செய்திடு      ( தழைக்கட்டும்)
மானுடமே


இது அதுவாகிலும்

நான் அதுவாக  இருப்பதால்
இதை ஆதரிக்க வேண்டும் என்றில்லை
நான் இதுவாக இருப்பதால்
அதை எதிர்க்க வேண்டும் என்றில்லை

நான் எதுவாக இருந்தாலும்
நியாயத்தின் பக்கம் நின்று
இதை அதை  தயங்காமல்
எதிர்த்தும் ஆதரித்தும்
செல்கிறேன்


Wednesday, October 5, 2016

கொய்த மலரின் விலை

கொய்மலர்களை
கொய்து கொண்டிருந்தவளிடம்
உன் காதலின் விலை
என்னவென்று கேட்டேன் ?
மலர்கள் கொய்ப்பட்டுவிட்டதால்
காதலுக்கு விலை இல்லை என்றாள்
நறுமணம் கமழ


காதலில் கருணை

கருணையால் காதல்  வரும்
அக் கருணை
ஊடலிலும் வரும்
காமத்திலும் வரும்
ஆனால்
காதலில் கருணை
தேடி திரியாதே
அது
ஆளை கொல்லும்


Monday, October 3, 2016

ஆறுதல் பரிசு

தோற்றவர்களுக்கு
ஊக்க மருந்தாய்
ஆறுதலாய்
தேற்றுவதற்கு
வழங்கப்படும்

வெற்றியை நோக்கிய உந்துதலில்
ஆறாத வடுதான்
அந்த ஆறுதல் பரிசு


பொம்மை விரும்பிகள்

சிறு வயதில்
வெறும் கண்களை
மட்டுமே சிமிட்டும்
பொம்மைகளோடே
விளையாடி பழகியவர்கள்

வளர்ந்த பின்
வாய் பேசாமல்
வெறும் தலையை
மட்டுமே ஆட்டும்
பொம்மையோடே
வழ விரும்புகிறார்கள்


என்னை மறந்துவிடு

என்னை மறக்க
உனக்கு ஒரு யோசனை சொல்கிறேன்
முதலில் என்னை நிந்தித்து விடு
பிறகு என்னை பிரிந்து விடு
நேரம் வரும்போது
என் முதுகில் குத்தி
துரோகத்தால்
என்னை கொன்று விடு


Sunday, October 2, 2016

இயல்பில் நிம்மதி

இயல்பை தொலைத்த
இமேஜ் (கௌரவம்) பிடித்த மனிதர்கள் இம்மையில்
இன்னல்கள் நிறைந்தும்
நிம்மதி தொலைத்தும்
இருக்கிறார்கள்



சிந்தித்து மடை போடு

வேகமாய் பாய்ந்துவரும் வெள்ளத்தை
மடை மாற்றுவது
அவ்வளவு எளிதல்ல
மெதுவாய் ஓடிவரும் ஓடையை (ஓடைநீரை)
எளிதில் மடை மாற்றிவிடலாம்

சிந்தித்து  மடை போடுங்கள்


புரியாதப் பேச்சு

நான்கு  நபர்கள்  இருக்கும்
ஒரு  அறையில் பேசுவேன்
ஒருவருக்கும்
நான்  பேசுவது  புரியாது
இன்று
நானூறு அறைகளிடம்
பேசுகிறேன்
அனைத்தும் எதிரொலிக்கிறது
நான்  பேசியதை

அதை கேட்கும் 
எனக்கே ஒன்றும் புரியவில்லை



ஆழ்ந்த நோக்கம்

தூக்கம்  வரும்போது தூங்கிவிடுகிறேன்
விழிப்பு வரும்போது எழுந்துவிடுகிறேன்
இதில்  எந்த  இடையுருமில்லை

என்று மட்டும் நினைக்க வேண்டாம்

தூங்கும் போது
கனவிலும் சிந்தித்து
கொண்டுதான் இருக்கிறேன்

விழித்துக்கொள்ளும் போது
சிந்தித்ததை செயல் படுத்தி
கொண்டுதான் இருக்கிறேன்

என்நேரமும் ஏதோவொரு செயலை
செய்து கொண்டுதான் இருக்கிறேன்



தாயம் நான்

காதாலில்லா கவிஞன் நான்
கால் தடமில்லா கடற்கரை நான்
சோகியில் விழுந்த தாயம் நான்
சோர்வில்லா தென்றல் நான்
ஊடலில்லா கூடலில்லா காமம் நான் (காயம்)


காதல் அற்றவளா ?

நான் அவளை காதலித்தேன் என்பதைவிட
அவள் தான் என்னை காதலித்தால்
என்கிற உண்மையை மட்டும்
எல்லோரும் நம்ப மறுக்கிறார்கள்,
ஏன் அவளுக்கு மட்டும் இந்த சலுகை.
ஏன் அவள் காதல் அற்றவளா ?
இதுவரை யாரையும் காதலித்ததில்லையா ?.


Saturday, October 1, 2016

ஆயிரத்தில் ஒருவன்

999 நபர்களை தவிர்த்து ஒருவன் மட்டும் வேறுவிதமாக
திலகமென்று தனித்து தனித்துவமாக தெரிந்தால்
அவனே "ஆயிரத்தில் ஒருவன் "


Popular Posts

Labels

காதல் ஹைக்கூ ஹைக்கு Siru Kavithaigal காதல் சிந்தனை சாதி Motivational [(Aunty) National] நேஷனல் கவிதைகள் அகத்தில் வாழ்பவள் அங்கீகாரம் அடமான வாழ்வு அணுகும் தனிமை அது நீ தான் அன்பின் இழப்பு அன்பின் காற்று அன்பு காற்று அன்பு முத்தம் அன்பே தழைக்கும் அன்பே லாபம் அன்பேன ரசித்தது அன்பை வெளிபடுத்துங்கள் அபத்தமானவன் அப்பாவிடம் பேச ஆசை அறிமுகமாகிறேன் அறிவுரை அற்புத உலகம் அளவில்லா அளவு அழகுகளை தேடுகிறோம் அழகை இரசியுங்கள் அழியாத உரையாடல்கள் அவன் அவள் அவளுக்காக அவள் கவிதைகள் ஆசை ஆசைகள் அடங்காது ஆடி காய்ச்சல் ஆணவ காதல் ஆண்கள் தினம் ஆண்டது விழும் ஆன்மீக அறிவியல் ஆயிரத்தில் ஒரு இரவு ஆயிரத்தில் ஒருவன் ஆறுதல் பரிசு ஆழ்ந்த நோக்கம் இணைய விட்டில்கள் இணையில்லா துருவம் இது அதுவாகிலும் இன பேதம் இயல்பில் நிம்மதி இரசிக்க தேடுகிறேன் இரவு பொழுது இருக்கம் இறவா இளமை இலக்கை நோக்கி இளைஞர் சிறகுகள் இழக்கிறிர்கள் இவ்வாழ்வு ஈகோ உங்கள் வட்டம் உன் சாயல் தான் உன்னிடம் தொலைந்துவிட்டேன் உறவு உறவு சொற்கள் ஊடல் கவிமழை எதிர்பார்க்கிறேன் எதையோ எதிர்பாக்கிறார்கள் எனக்கான பாராட்டு எனக்குள் பல வழிகள் எனக்கென கவிதை எனதுலகம் என் அப்பாவுக்கு என் உயிரே என் கர்ஜனை என் காதலி என்ன என்றது என்னை தொடாதே என்னை உனக்கு தெரியும் என்னை எண்ணுகிறேன் என்னை மறந்துவிடு என்னை வைத்தேன் எழுத்தில் வன்மம் ஏகாந்த நிலை ஏதும்மில்லை ஏதோ தேடல் ஏமாற்ற பயணம் ஒதுங்கிய கூட்டம் ஒன்னுக்கு விலை ஒன்றாக ஒருதலை காதல் ஒரே நிகழ்வு ஒற்றுமையுடன் வாழலாம் ஒளி சுடர் ஒழுங்கின் ஒழுக்கம் ஓரக்கண்ணால் ஓர் ஆசை ஓர் இரவு கூத்து கடல் உயிர்கள் கட்டில் காத்து கிடக்கிறது கட்டுக்குள் வாழு கண்ணாடி கவிதை கண்ணால கவுத்துப்புட்ட கண்ணி நான் கதை காதல்கள் கதை சொல்ல நேரமில்லை கனவின் வழி கனவிலும் நிஜத்திலும் கனவுகளாய் கனவை கரைத்தல் கன்னிக் காளையர் கரு கரையுமோ (கரையும் கரு) கருங்குழலே கருத்து மறுப்பு கருத்துரிமை கரை சேரவே கறுப்பு வாழ்கையில் கறுப்புப்பண கப்பல் கற்பனை ரசனை கலப்பு திருமணம் கலாச்சாரம் கலை இனிக்கிறது கல்லாத கையளவு கள்ள பணம் கள்ள மனம் கள்ளம் இல்லா உள்ளம் கள்வனின் காதலே கழுகின் கருணை கவலை குப்பை கவிதை இரவு கவிதை கனவு கவிதையின் தவம் காதலி இல்லா இன்பம் காதலில் கருணை காதலில் கரைகிறேன் காதல் அற்றவளா ? காதல் கசக்கிறது காதல் கண்கள் காதல் தேடும் ஊடல் காதல் பிறப்பு காதல் வகைகள் காதல் வரவில்லையே கானல் கண்ணீர் காபி காதலி காம தாகம் காமாயணம் காரியமானவள் கார்பன் வாழ்க்கை காற்றுக்கு வேலி காலதாமத புரிதல் காலத்தின் கட்டாயம் காலம் கடத்துகிறேன் கீதம் வரைந்த முகம் கூர் புத்தி கெஞ்சல்கள் கேன கோழிகள் கேலி சாலி கேள்விகளால் கேள்விகளுக்குள் வாழ்வு கைமாத்து கொய்த மலரின் விலை கோடை பூக்கள் சங்கேத செய்தி சந்தித்த முத்தங்கள் சமய சாரம் சித்தனின் பக்தி சிந்தித்து மடை போடு சிறந்த கவிஞன் சிறந்த சமத்துவம் சிறு கவிதைகள் சில சொந்தம் சுய இன்பம் செடிவெடி செம வெயில் இன்று செயலே அன்பு செல்வோர் செல்வார் சொங்கி வீரம் சொல்லாத கதைகள் சோதனைகளை சோதித்தவன் சோலை சொல் ஜாதி வெறி வண்டி டிரெண்டிங் லிஸ்ட் தக்காளி தோட்டா தக்கிடதிமி தா தடமான வாரலாறு தடையம் தட்டச்சு வடு தண்டனையா சட்டம் தனி கருத்து தனி காட்டு ராஜா தனிமை பொழுது தன் கொள்ளை தல தலி தலைகனம் கனம் தலைமை தலைவியின் யுக்தி தவறாதே தாமரை நிலவே தாயம் நான் தாய் மனசே தேசம் திசை அறியா பயணம் திருநங்கை திருப்பி அடி துணிவு துணை துருவ திசைகள் துரோக காரணியமானேன் தெரியாத சங்கதிகள் தேடல் மனது தேடி நாடி தேடு காட்டாத தேவை இல்லாத தேடல் தொடரும் சாதி தொட்டால் தீட்டு நடிப்பு கண்காணிப்பு நன் பூ செண்டுகள் நமக்கு ஏன் வம்பு நமக்குள் பரம் நம் முத்தங்கள் நம்பிக்கை கொள் நல்ல வேசி நல்லவன் கெட்டவன் நாகரிக அநீதி நாடக காதல் நாணிய மலர் நான் இல்லை நான் தூங்கமாட்டேன் நான் நான் டா நிகழும் பொழுதை நிறை செய் நித்தம் நான் நினைவலைகளை நினைவு நினைவுகள் நிம்மதி நாடி நிர்வாணம் நீங்கா நினைவாகிறாள் நீட்சியீன் நாயகன் நீயாக நானாக நேச வாசிப்பு பக்குவமான பாதை பங்கு சந்தை பசி அதனை ரசி பசி கனவு படுகுழி படைப்பின் சுவடு படைப்பிலக்கணம் பதில் தேடும் பாதைகள் பனி வேர்வை பலனற்ற கடமை பழகியதே பழமை புதுமையினுள் பாடம் கற்கிறேன் பாராட்டுகள் படும்பாடு பார்வை ஒன்றே போதும் பார்வையாளர்கள் நாகரிகம் பாவப்பட்ட பாவை பாவையில்லா பயணம் பிட்ச்சை வாழ்வு பின் வரும் நினைவு பின்முன் பிழைகள் புகழே ஒழிக புது சிந்தனைகள் புத்தாண்டு வாழ்த்துகள் புரட்சி பதவிகள் புரியா சந்திப்பு புரியாதப் பேச்சு புலம்பல் பூக்களின் சுமை பூக்கள் நனைகிறது பூஜையும் படையலும் பெண் விடுதலை பெறுகிறேன் தருகிறேன் பொம்மை விரும்பிகள் பொய் முக நூல் பொறுப்பு இல்லாதவன் போகி கழிதல் போக்கத்தவன் நான் போதையின் சுபாவம் போராட்ட பக்கங்கள் மகிழ்ச்சியின் விலை மஞ்சள் மலரே மதம் கொண்ட மனங்கள். மனசு என்பது என்ன மனம் வீசு முல்லையே மன்னித்து விடு மன்னிப்பு பிட்ச்சை மரண நச்சு பா மரணப் பயணம் மறு உலகம் மறு வாழ்வு மறுமை கனவு மவுன ராகம் மவுனப் பாடல் மானுட சாதி மானுடமே மாய மங்கை மாயை மாறா நிகழ்வுகள் மாறும் நிலைகள் மிகும் மோகம் மிதப்பில் மீண்டும் தொடர்கிறாள் முகநூலில் முகமூடிகள் முகவரி தொலைத்தேன் முட்டு சந்து முதுகில் குத்துகள் முத்த சேமிப்பு முத்தக்காரி முன்னாள் காதலன் முலைகளை காட்டு முள் சுட்டது மூண்ணூறு மைல் இறுமாப்பு மூளையில் சுடு மெய் ஞானம் மை பொழிதல் மொழி யுகம் கடந்த பெண் ரசனை ரசிகன் லாபம் பாவம் வண்ணம் வயல் பலி வரலட்சுமி விரதம் வரலாற்று சாலைகள் வலியும் வழியும் வாய் வம்பு வாய்பூட்டு வாய்ப்பு வாழவிடு வாழும் வாழ்த்துகள் வாழ்க்கை சக்கரம் வாழ்வின் வழி விடியல் தேடல் விடுமுறை வாழ்வு விடுமுறை வாழ்வு 2 விட்டு சென்றவர்கள் விட்டுவிட்டாள் விதி தாண்டும் மதி விலை மகன் வீட்டுக்காரி சுகமே வெளியில் மனிதநேயம் வேட்க உணர்வுகள் வேற்று கிரக தொடர்பு வேற்றொரு ஒருதலை காதல் வைரம்