Friday, September 30, 2016

காதல் கண்கள்

புற கண்களால் பார்த்து காதலித்தவர்கள் தான்,
காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள்
அக கண்களால் பார்த்து காதலித்தவர்கள்
அப்படி சொல்வதில்லை

கண் பார்வையற்ற காதலர்களை
வியப்புடன் பார்க்கையில்

காதலுக்கு கண்கள் உண்டு
அது உண்மை எனும் உணர்வில் மட்டுமே உண்டு


Thursday, September 29, 2016

காதல் வகைகள்

இன்னும் இந்த உலகில்
எத்தனையோ வகை காதல்கள் இருக்கிறது
அதனை சொல்வதற்கு எதோ குறைகிறது
அது வார்த்தைகளோ , எழுத்துகளோ, எண்ணங்களோ, உணர்சிகளோ
என்று எனக்குகே தெரியவில்லை


வேற்றொரு ஒருதலை காதல்

சிலருக்கு மொழியின் மீது காதல்
சிலருக்கு சாதியின் மீது காதல்
சிலருக்கு மதத்தின் மீது காதல்
சிலருக்கு பொருட்களின் மீது காதல்
சிலருக்கு சொத்துகளின் மீது காதல்

மாறாக அவைகள் உங்களை காதலிக்க போவதில்லை என்று தெரிந்தும்.
கொள்கிறிர்கள் ஒருதலையாய் அதன்அதன்மீது காதலை


காதல் கசக்கிறது

காதல் காலம் கடந்தது
அதில் நான் என்னை கடத்துகிறேன்
காலம் கடப்பதை அறியாமல்
அகவே காதல் தட்டுபாட்டை (கட்டுப்பாட்டை)
என்னுள் ஏற்படுத்துகிறேன்
காதல் கசக்கிறது

(இனி காதல் கவிதைகளுக்கு என்னிடம் செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தப்போகிறேன் ....)


ஒருதலை காதல்

ஒருவரோடு ஒருவர்
ஒன்றாமல்
ஒற்றை உள்ளம்
ஓரமாய் ஓசையின்றி ஒளிவுமறைவாக
ஒத்து போகுமோ போகாதோ
என்ற சந்தேகத்தில்
சற்றே ஒதுங்கிய நிலையில்
உள்ளுக்குள் குமுருவதே
ஒருதலை காதல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காண வழியுமின்றி
காலம் கொண்டு சென்றவர்களையும்
கைவிட்டு சென்றவர்களையும்
காதலித்து காலம் கரைப்பதும்
ஒருதலை காதல் தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தனக்குள் தோன்றிய காதல்
தன்னை ஆட்கொண்டு கையாள்வதால்
தன்னையன்றி வேறு யாரும்
புரிந்துகொள்ளவோ
புறந்தள்ளவோ
முடியாது

=================================================================

காதல் கூட தோற்று போகும்
ஒருதலை காதல் ஒருபோதும்
தோற்று போவதில்லை

காதல் கூட பொய்யாகும்
ஒருதலை காதல் ஒருபோதும்
பொய்யாகாது

பாலினமற்றது பாரபட்சமற்றது

++++++++++++++++++++
(நான்கு கவிதைகள் ஒரே தலைப்பின் கீழ் , ஒன்று சேர்த்தாலும் தகும் அல்லது தனித்தனியாக (ஒருதலையாக) பிரித்தாலும் பொருள் தரும் )
***********************
சிலருக்கு மொழிமீது காதல்
சிலருக்கு சாதியின் மீது காதல்
சிலருக்கு மதத்தின் மீது காதல்
மாறாக அவைகள் உங்களை காதலிக்க போவதில்லை என்று தெரிந்தும்.
கொள்கிறிர்கள் ஒருதலையாய் அதன்அதன்மீது காதலைநாடக காதல்

சினிமா நடிகை நடிகர்களையே
நினைத்து
காதலிக்க பழகிவிட்டோம்
நிஜவாழ்விலும்
நடிப்பவர்களையே
நம்பி ஏமாந்து போகிறோம்Tuesday, September 27, 2016

காதலில் கரைகிறேன்

விழி பார்வைக்கே வழுக்கும் மனசு (தான்)
என்னை பார்த்து சிரித்துவிட்டு சென்ற பின்பும்
காதலில் கரையாமல் திடமாய் நிற்குமோ
காதலில் கரைகிறேன் (வழிகிறேன்)
காதலாய் உன்மேல்


விட்டு சென்றவர்கள்

விட்டு சென்றவர்களுக்கு
எதோ ஒரு கரணம் இருக்கிறது
அதை ஏற்றுகொள்ள முடியாததால்
(நம்மை) வெறுத்து  புறந்தள்ளி இருக்கிறார்கள்

=============================================
                2
விட்டு சென்றவர்களுக்கு
எதோ ஒரு கரணம் இருக்கிறது
அதை ஜீரணித்து ஏற்றுகொள்ள முடியாததால்
(நம்மை) வெறுத்து  புறந்தள்ளி இருக்கிறார்கள்

===============================================
                  3

விட்டு சென்றவர்களுக்கு
எதோ ஒரு கரணம் இருக்கிறது
அதை சகித்துகொள்ள முடியாததால்
(நம்மை) வெறுத்து  புறந்தள்ளி இருக்கிறார்கள்

================================================


Sunday, September 25, 2016

கோடை பூக்கள்

வெண்மேக சேலை அணிந்து சுழலும் பூமி
அதன் வழி ஊடுருவும் ஆதவனின் கதிர்
இரவில் நிலவின் ஜொலிப்பு
நீரில் படர்ந்திடும் அதன் பிம்பம்
நட்சத்திர விரிப்பில் ஓடும் விண்மீன்கள்

இறை தேடி திரியும் பறவைகள்
தென்றலில் இசைந்தாடும் சோலைகள்
காய்கள் கனிகள் கொடிகள் மரம் செடிகள்
பூக்கும் பூக்கள்
இவையெல்லாம் கோடையின் வாசங்கள்

நான் நான் டா

நான் நிறம் டா
நான் மொழி டா
நான் சாதி டா
நான் மதம் டா
நான் கடவுள் டா
நான் மனிதன் டா
நான் நான் டா


கண்ணால கவுத்துப்புட்ட

கண்ணை காட்டி
கட்டி இழுத்து
முத்தத்தால் ஒத்தடம் கொடுத்து
மிச்சத்தையும் அள்ளி எடுத்து
உச்சந்தலையில் உள்ளிருந்து கொல்லுறியே
எப்படி வேண்டாமென்று வீசி எறிவேன்
நித்தம் உள்ளிருக்கும் உன்னை


Friday, September 23, 2016

கேள்விகளுக்குள் வாழ்வு

ஒரு நாளில்
ஒரு நளிகையாவது
அவள் எனக்காக ஒதுக்கி இருக்கலாம்
நான் சொல்லவந்ததை அவள் கேட்டு இருக்கலாம்
கேளாததால் கேள்விகளுக்குள்
வாழ்வின் பதில் தேடுகிறாள்


காமாயணம்

இதழ்களை சுவைக்க தொடங்கிய
காமம் விரல்களில் படர்ந்து
முலைகளில் பாய்கிறது விரசமாக
பின்னங்கழுத்தில் முத்தத்தால் தேய்த்து
முழங்களால் முதுகினை அளந்து
அலைந்து திரிந்து ஆழியில்
முடியும்வரை முந்துகிறது
அமுதும் தேனும் வழிந்திட


Thursday, September 22, 2016

பழமை புதுமையினுள்

பழைய சங்கலி கருப்பன் தான்
அவனுள்
புதிதாக இன்னொருவன்
பழைய நினைவுகளை திரட்டி
புது அனுபவங்களை கற்று
பழமை மாறாமல் புதுமையாக
வாழ்பவன்
நினைவு நினைவுகள்

எனக்கு ஞாபக மறதி ஜாஸ்த்தி
என் நினைவுக்காக
நினைவில் உள்ளதை வேறு தளங்களில் பதியவைத்துவிடுகிறேன்
என் நினைவிலிருந்து
அந்த நினைவுகளுக்கு முழு விடுதலையும் தந்து விடுகிறேன்
அதை மீண்டும் உங்கள் நினைவுகளில்
அந்த நினைவுகளை
என் நினைவால்
நீங்கள் சிறைபிடித்தால்
அதற்க்கு நான் பொறுப்பு அல்ல


Wednesday, September 21, 2016

நீங்கா நினைவாகிறாள்

(காதலியாக)
ஏற்க்கனவே நான் உன்னிடம்
விட்டு சென்ற  நினைவுகள் போதவில்லை
அகவே
இன்னும் நிறைய நினைவுகளை
கூட்டி சேர்த்து
உன் நிம்மாதியை மேலும் கெடுத்து
உன்னை வாட்டி வதைக்கவே
மீண்டும் வந்தேன்
(மனைவியாக)


Tuesday, September 20, 2016

துரோக காரணியமானேன்

எனக்கு நானே துரோகம் செய்துவிட்டேன்
என்னை யார் தண்டிப்பது
என்னை யார் மன்னிப்பது
என்னை நானே குற்றம்சுமத்துகிறேன்
என்னை நானே தண்டிக்கிறேன்
என்னை நானே மன்னித்தும்விடுகிறேன்


Monday, September 19, 2016

சமய சாரம்

முன்பு வைணவத்தாறோடு
பின்பு சைவத்தாறோடு
பாகுபாடுகளற்று
லீலைகள் புரிகிறாள்
வேங்குழல் இசையில்
(என்) பிரிந்தாவன தோட்டத்தில்
சமயம் கடந்து
சமத்துவம் காண்கிறாள்


Saturday, September 17, 2016

அன்பு காற்று

காதலுக்கும் அதில் நிறைந்திருக்கும் அன்புக்கும்
எப்படி பெரிதாக வேறுபாடுகள் இல்லையோ
அதுபோல்
காற்றுக்கும் அதன் வழியே ஒலிக்கும் இசைக்கும் பெரிதாக
வேறுபாடுகள் இல்லை


பாராட்டுகள் படும்பாடு

பாடுபடுபவர்கள் பாராட்டுகளை
எதிர்ப்பார்ப்பதில்லை
பாராட்டுகளை எதிர்ப்பார்ப்பவர்கள்
பாடுபடுவதில்லை


கள்ள மனம்

சண்டையிட்டு பிரிந்த பிறகு
காதலிக்கு ஆதரவாக காதல் செய்யும்படி
காதல் உசுப்பேத்த வந்தவளையே
(கரெக்ட் பண்ண) துடிக்கிறது                 (காதலில் கவுக்க துடிக்கிறது)
இந்த கள்ள மனம்.
அபத்தமானவன்

யார் சாயலுமில்லாமல்
நான் தன்னிச்சையாக வளர்ந்து நிற்கிறேன்
முதலில் புரியாத புதிராகவும்
பிறகு புது விதமாகவும்
தோன்றும்

சில நேரங்களில் அபத்தமாகவும் தோன்றும்
பல நேரங்களில் ஆபத்தாகவும் தோன்றும்


Friday, September 16, 2016

விதி தாண்டும் மதி

விதியை தாண்டி போக
வழி தேடுகிறேன்
அதற்காக
என்னை நான்
விளம்பரம் செய்கிறேன்
மதிகேடான் என்று


நித்தம் நான்

இருப்பதும் நான் இறப்பதும் நான்
நான் இறப்பதும் நான் இருப்பதும்
இறப்பில்லாமல் இருப்பதும்

நான்


கழுகின் கருணை

 சென்றமுறை நான் இறந்துகிடந்த போது
என்னை சுற்றிய கழுகுகள்
 இம்முறையும் என்மேல் வட்டமடிக்கிறது
அழுகிய உடலாக இருந்தும்
ஏனோ என் அருகில் வரவில்லை
என்னை கொத்தி கொதறி என் கறியை உண்ணவில்லைதன் கொள்ளை

கண்டவனும் கொண்டவனும்
கைவிட்டுவிட்டதால்
அவள்
கொள்ளைகொண்டவனோடு
கைகோர்த்துவிட்டாள்


தவறாதே

தவறுகள் நடப்பது இயல்பு
அதை புரிந்துகொண்டு
தவறுகளை தவறாமல்
சரி செய்வது
மாண்பு


நீயாக நானாக

நீ நீயாக இருந்தபடியும், நான் நானாக இருந்தபடியும்
விட்டுக்கொடாமல்
காதல் கொள்ள முயன்றும்
முடியாமல்
பிரிகிறோம்
இனி
நீ நீயாக , நான் நானாக.


Thursday, September 15, 2016

காதல் தேடும் ஊடல்

தொட்டாலும் கட்டிக்கொண்டாலும்
கெட்டுப்போவதில்லை
ஊடல்
விட்டாலும் எட்டிநின்றாலும்
விட்டுப்போவதில்லை
காதல்இரசிக்க தேடுகிறேன்

இதுவரை அவளை நினைத்து
இரசித்த பாடல் வரிகள்
இனி
வேற்றொருவளை நினைத்து
இரசிக்க பயணப்படும்

இந்த இடைப்பட்ட காலத்தில்
வேற்றொருத்தியை
தேடுகிறேன்

பாடலை இரசிக்ககானல் கண்ணீர்

கடலிலும் கானல் உண்டு
கண்ணீரிலும் கரைகள் உண்டு
கானல்களுக்கு கரைகள் இல்லை
கடல்களுக்கு கண்ணீர் சொந்தமில்லை


கருங்குழலே

(கருங்)குழல் நடுவே வகுடுகள் பாயும்
ஒற்றை சுழி தனில் ஓடி சேரும்
வெண்மலர் இடுக்கினில்
வீழ்சியாய் வழிந்தோடும்
பின்னிய
பின்னல்களை கடந்து
குஞ்சத்தை அடைந்து
இறுதியில் இடை தனில்
இசைந்தாடும்.தாமரை நிலவே

நிலவில் கொஞ்சம்
அதன்
நிழலில் கொஞ்சம்
நனையும் தாமரை
நீரில் நனையா
இலைகள் நடுவே
நீந்துகிறது
நான் தான் நிலவென்று


கவிதை கனவு

கனவுகளில் அவளை கடந்த பின்பும்
கவிதைகளில் அவளின் முகம் ஞாபகம்திருநங்கை

இவள் பெண்மை இல்லா
பெண்மணி
தாய்மை இல்லா
தனி மணிநான் இல்லை

நேற்றுவரை நான் இங்கில்லை
இன்றுமுதல் நான் அவனில்லை
நாளைமுதல் நான் என்னுள் இல்லை


வாழும் வாழ்த்துகள்

உனக்கு வந்த
ஆயிரம் வாழ்த்துகளில்
என் வாழ்த்தும்
வாழ்கிறது
எதோ ஒரு மூலையில்
சொருகப்பட்ட சுருக்கெழுத்தாய்கரு கரையுமோ (கரையும் கரு)

கயவனால் கையாடல் செய்யப்பட்டு
கர்ப்பை இழந்தவள்
கருவை கலைக்க
கடும் மலையில் நனைகிறாள்Tuesday, September 13, 2016

காற்றுக்கு வேலி

இங்கேது காற்று துளைத்து செல்ல இடம்
இருவரும் இறுக்கி அணைத்து தழுவும்போது


Monday, September 12, 2016

கனவுகளாய்

நான் மட்டும் கனவுகள் இல்லை
அவளும் கனவுகள் தான்
இருவரும் கனவுகளில் வாழ்கிறோம்
கனவுகளாய்


Sunday, September 11, 2016

நல்ல வேசி

தினுசு தினுசாக ஆளை மாத்துரியே
அலுத்து போன பிறகு
புது ஆளை
இதமாய் சேர்க்குறியே

நியாயம் கேட்டால்
கேட்போரை
கவுக்க பாக்குறியே

நல்லவளாக நடித்து
வேசி வாழ்க்கை
வாழுறியே


முத்தக்காரி

ஒய்யாரி சிங்காரி
கச்சைகள் இல்லா
சித்துக்காரி என் முத்தக்காரி...


காரியமானவள்

ஒரு பக்கம் வந்தாள்
ஒரு முத்தம் தந்தாள்
முத்தக்காரி

இதழ் நித்தம் தந்து
எனை பித்தம் செய்தாள்
சித்துக்காரி

இவள்
பொய்க்காரி
ஒய்யாரி
சிங்காரி
மாயக்காரி

எல்லாம் உனக்கு நான்னாக

இனி ஒரு காலம் வருமோ
என்னோடு நீ பயணிக்க

இதுவரை உன்னுள்
நான் வாழ்ந்த நாட்கள்
பொற்காலம்

இனி நீ என்னை நிரந்தரமாய் இழக்க  போகிறாய்
என் நினைவுகளை மட்டும்  சுமந்துகொண்டு
காலம் காலமாய்
திரிய போகிறாய்

உனக்கு
எல்லாம்
நான்னாகFriday, September 9, 2016

இலக்கை நோக்கி

இங்கே அனைவருக்கும் ஓர் இலக்கு உண்டு
வெற்றியோ தோல்வியோ
அந்த இலக்கை நோக்கி தான்  பயணிக்கிறார்கள்.
ஆனால்
நான் மட்டும் திசை மாறி பயணிக்கிறேன்
என் இலக்கு இன்னாது என தேடி.


Thursday, September 8, 2016

துருவ திசைகள்

துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்

பார்த்துவிட்டேன்
உன்னைப்போல்
ஒரு
பேதையை
நான் பார்த்ததில்லை

===============================================

துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்
குருடனாய்
கடந்து வந்து விட்டேன்
எங்கும் எதையும்
பார்த்திராத நான்
பார்த்தேன் உன்னை
பார்வை யுள்ள (யற்ற)
பரதேசியாய்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்

நம் காதல்
கைகூட
காத்துக்கிடக்கிறது

நாம் இன்னும்
காத்துக்கிடப்பதை
பார்த்து
பொறுக்க முடியாமல்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்

ஏங்குகிறது
ஏக்கத்தின் தாக்கம்
ஏன்
என்று
பார்த்தேன்

ஏழ்மை தெரிந்தது
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்

நம்மை
கண்காணிக்கிறது
எங்கே
நாம் ஒருவரை ஒருவர்
பார்த்து
காதல் கொண்டுவிடுவோமோ
என்று

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

துருவங்கள்  இரண்டும்
திசைகள்  எட்டும்

நான்
பார்த்துவிட்டு விட்டேன்
ஒரு பொய்யை
உன்னைப்போல்
பேரழகி
இவ்வுலகில்
இல்லை
என்று
****************************************************

(அறுசுவை)

நான் தூங்கமாட்டேன்

நான் விழித்துகொண்டு தான் இருக்கிறேன்
இருந்தாலும் சிலர் என்னை தட்டி எழுப்புகிறார்கள் .

அவர்களிடம் சொல்லுவதற்கு
வேற்றோன்றுமில்லை
நான் தூங்கமாட்டேன்
என்று


Wednesday, September 7, 2016

ஒழுங்கின் ஒழுக்கம்

நான் அனைத்து
வரையறையையும் வரம்பையும் ஒழுக்கத்துடன் மீறுகிறேன்
ஒழுங்கில்லாத காரணத்தால்.


பெறுகிறேன் தருகிறேன்

என் எண்ணங்களின் தாக்கம் உங்களிடமிருந்தால்..
என் எண்ணங்களின் தாக்கமும் முன்பே உங்களிடமிருந்து பெறப்பெற்றதே
பெறுகிறேன் தருகிறேன்Monday, September 5, 2016

அன்பே லாபம்

அன்பை நோக்கிய திருமண பயணங்கள்
வாழும்
லாபத்தை (வருமானம்) நோக்கிய திருமண பயணங்கள்
சாகும்


Popular Posts

Labels

ஹைக்கூ ஹைக்கு Siru Kavithaigal காதல் சிந்தனை [(Aunty) National] நேஷனல் கவிதைகள் அகத்தில் வாழ்பவள் அங்கீகாரம் அடமான வாழ்வு அணுகும் தனிமை அது நீ தான் அன்பின் இழப்பு அன்பின் காற்று அன்பு காற்று அன்பு முத்தம் அன்பே தழைக்கும் அன்பே லாபம் அன்பேன ரசித்தது அன்பை வெளிபடுத்துங்கள் அபத்தமானவன் அப்பாவிடம் பேச ஆசை அறிமுகமாகிறேன் அற்புத உலகம் அளவில்லா அளவு அழகுகளை தேடுகிறோம் அழகை இரசியுங்கள் அழியாத உரையாடல்கள் அவன் அவள் அவளுக்காக அவள் கவிதைகள் ஆசை ஆசைகள் அடங்காது ஆடி காய்ச்சல் ஆணவ காதல் ஆண்கள் தினம் ஆண்டது விழும் ஆன்மீக அறிவியல் ஆயிரத்தில் ஒரு இரவு ஆயிரத்தில் ஒருவன் ஆறுதல் பரிசு ஆழ்ந்த நோக்கம் இணைய விட்டில்கள் இணையில்லா துருவம் இது அதுவாகிலும் இன பேதம் இயல்பில் நிம்மதி இரசிக்க தேடுகிறேன் இரவு பொழுது இருக்கம் இறவா இளமை இலக்கை நோக்கி இளைஞர் சிறகுகள் இழக்கிறிர்கள் இவ்வாழ்வு ஈகோ உங்கள் வட்டம் உன் சாயல் தான் உன்னிடம் தொலைந்துவிட்டேன் உறவு சொற்கள் ஊடல் கவிமழை எதிர்பார்க்கிறேன் எதையோ எதிர்பாக்கிறார்கள் எனக்கான பாராட்டு எனக்குள் பல வழிகள் எனக்கென கவிதை எனதுலகம் என் அப்பாவுக்கு என் உயிரே என் கர்ஜனை என் காதலி என்ன என்றது என்னை தொடாதே என்னை உனக்கு தெரியும் என்னை எண்ணுகிறேன் என்னை மறந்துவிடு என்னை வைத்தேன் எல்லாம் உனக்கு நான்னாக எழுத்தில் வன்மம் ஏகாந்த நிலை ஏதும்மில்லை ஏதோ தேடல் ஏமாற்ற பயணம் ஒதுங்கிய கூட்டம் ஒன்னுக்கு விலை ஒன்றாக ஒருதலை காதல் ஒரே நிகழ்வு ஒற்றுமையுடன் வாழலாம் ஒளி சுடர் ஒழுங்கின் ஒழுக்கம் ஓரக்கண்ணால் ஓர் ஆசை ஓர் இரவு கூத்து கடல் உயிர்கள் கட்டில் காத்து கிடக்கிறது கட்டுக்குள் வாழு கண்ணாடி கவிதை கண்ணால கவுத்துப்புட்ட கண்ணி நான் கதை காதல்கள் கதை சொல்ல நேரமில்லை கனவின் வழி கனவிலும் நிஜத்திலும் கனவுகளாய் கனவை கரைத்தல் கன்னிக் காளையர் கரு கரையுமோ (கரையும் கரு) கருங்குழலே கருத்து மறுப்பு கருத்துரிமை கரை சேரவே கறுப்பு வாழ்கையில் கறுப்புப்பண கப்பல் கற்பனை ரசனை கலப்பு திருமணம் கலாச்சாரம் கலை இனிக்கிறது கல்லாத கையளவு கள்ள பணம் கள்ள மனம் கள்ளம் இல்லா உள்ளம் கள்வனின் காதலே கழுகின் கருணை கவலை குப்பை கவிதை இரவு கவிதை கனவு கவிதையின் தவம் காதலி இல்லா இன்பம் காதலில் கருணை காதலில் கரைகிறேன் காதல் அற்றவளா ? காதல் கசக்கிறது காதல் கண்கள் காதல் தேடும் ஊடல் காதல் பிறப்பு காதல் வகைகள் காதல் வரவில்லையே கானல் கண்ணீர் காபி காதலி காம தாகம் காமாயணம் காரியமானவள் கார்பன் வாழ்க்கை காற்றுக்கு வேலி காலதாமத புரிதல் காலத்தின் கட்டாயம் காலம் கடத்துகிறேன் கீதம் வரைந்த முகம் கூர் புத்தி கெஞ்சல்கள் கேன கோழிகள் கேலி சாலி கேள்விகளால் கேள்விகளுக்குள் வாழ்வு கைமாத்து கொய்த மலரின் விலை கோடை பூக்கள் சங்கேத செய்தி சந்தித்த முத்தங்கள் சமய சாரம் சித்தனின் பக்தி சிந்தித்து மடை போடு சிறந்த கவிஞன் சிறந்த சமத்துவம் சிறு கவிதைகள் சில சொந்தம் சுய இன்பம் செடிவெடி செம வெயில் இன்று செயலே அன்பு செல்வோர் செல்வார் சொங்கி வீரம் சொல்லாத கதைகள் சோதனைகளை சோதித்தவன் சோலை சொல் ஜாதி வெறி வண்டி டிரெண்டிங் லிஸ்ட் தக்காளி தோட்டா தக்கிடதிமி தா தடமான வாரலாறு தடையம் தட்டச்சு வடு தண்டனையா சட்டம் தனி கருத்து தனி காட்டு ராஜா தனிமை பொழுது தன் கொள்ளை தல தலி தலைகனம் கனம் தலைமை தலைவியின் யுக்தி தவறாதே தாமரை நிலவே தாயம் நான் தாய் மனசே தேசம் திசை அறியா பயணம் திருநங்கை திருப்பி அடி துணிவு துணை துருவ திசைகள் துரோக காரணியமானேன் தெரியாத சங்கதிகள் தேடல் மனது தேடு காட்டாத தேவை இல்லாத தேடல் தொடரும் சாதி நடிப்பு கண்காணிப்பு நன் பூ செண்டுகள் நமக்கு ஏன் வம்பு நமக்குள் பரம் நம் முத்தங்கள் நம்பிக்கை கொள் நல்ல வேசி நல்லவன் கெட்டவன் நாகரிக அநீதி நாடக காதல் நாணிய மலர் நான் இல்லை நான் தூங்கமாட்டேன் நான் நான் டா நிகழும் பொழுதை நிறை செய் நித்தம் நான் நினைவலைகளை நினைவு நினைவுகள் நிம்மதி நாடி நிர்வாணம் நீங்கா நினைவாகிறாள் நீட்சியீன் நாயகன் நீயாக நானாக நேச வாசிப்பு பக்குவமான பாதை பங்கு சந்தை பசி அதனை ரசி பசி கனவு படுகுழி படைப்பின் சுவடு படைப்பிலக்கணம் பதில் தேடும் பாதைகள் பதில்லில்லா புறக்கணிப்பு பனி வேர்வை பலனற்ற கடமை பழகியதே பழமை புதுமையினுள் பாடம் கற்கிறேன் பாராட்டுகள் படும்பாடு பார்வை ஒன்றே போதும் பார்வையாளர்கள் நாகரிகம் பாவப்பட்ட பாவை பாவையில்லா பயணம் பிட்ச்சை வாழ்வு பின் வரும் நினைவு பின்முன் பிழைகள் புகழே ஒழிக புது சிந்தனைகள் புத்தாண்டு வாழ்த்துகள் புரட்சி பதவிகள் புரியாதப் பேச்சு புலம்பல் பூக்களின் சுமை பூக்கள் நனைகிறது பூஜையும் படையலும் பெண் விடுதலை பெறுகிறேன் தருகிறேன் பொம்மை விரும்பிகள் பொய் முக நூல் பொறுப்பு இல்லாதவன் பொறுமையின் புரிதல் போகி கழிதல் போக்கத்தவன் நான் போதையின் சுபாவம் போராட்ட பக்கங்கள் மகிழ்ச்சியின் விலை மஞ்சள் மலரே மதம் கொண்ட மனங்கள். மனசு என்பது என்ன மனம் வீசு முல்லையே மன்னித்து விடு மன்னிப்பு பிட்ச்சை மரணப் பயணம் மரணமே வா வா மறு உலகம் மறு வாழ்வு மறுமை கனவு மவுன ராகம் மவுனப் பாடல் மானுட சாதி மானுடமே மாய மங்கை மாயை மாறா நிகழ்வுகள் மாறும் நிலைகள் மிகும் மோகம் மிதப்பில் மீண்டும் தொடர்கிறாள் முகநூலில் முகமூடிகள் முட்டு சந்து முதுகில் குத்துகள் முத்த சேமிப்பு முத்தக்காரி முலைகளை காட்டு முள் சுட்டது மூண்ணூறு மைல் இறுமாப்பு மூளையில் சுடு மை பொழிதல் மொழிகலன்கள் யுகம் கடந்த பெண் ரசனை ரசிகன் லாபம் பாவம் வயல் பலி வரலட்சுமி விரதம் வரலாற்று சாலைகள் வலியும் வழியும் வாய் வம்பு வாய்பூட்டு வாய்ப்பு வாழவிடு வாழும் வாழ்த்துகள் வாழ்க்கை சக்கரம் வாழ்வின் வழி விடியல் தேடல் விடுமுறை வாழ்வு விடுமுறை வாழ்வு 2 விட்டு சென்றவர்கள் விட்டுவிட்டாள் விதி தாண்டும் மதி விலை மகன் வீட்டுக்காரி சுகமே வெளியில் மனிதநேயம் வேட்க உணர்வுகள் வேற்று கிரக தொடர்பு வேற்றொரு ஒருதலை காதல் வைரம்