புகழ் சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியாது
பழி சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியும்
புகழ் தற்பெருமை தலைகனம் கொள்ள செய்யும்
இகழ் தன்நலம் பாராமல் திருத்தம் மேற்கொள்ள செய்யும்.
புகழ் சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியாது
பழி சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியும்
புகழ் தற்பெருமை தலைகனம் கொள்ள செய்யும்
இகழ் தன்நலம் பாராமல் திருத்தம் மேற்கொள்ள செய்யும்.
ஆட்டம் ஆடும் வரை தான் மரியாதை
அடிபட்டு கிடந்தால்
அய்யோ பாவம் என கடந்து செல்வார்கள்
அப்பொழுதும் அன்பே துணை நிற்கும்
அரவணைக்கும்
நயவஞ்சகத்தால் வெல்வது சாமர்த்தியமல்ல
துரோகத்தால் வெல்வது வெற்றியல்ல
நீதி நியாய தர்மத்தின் படி வெல்வதே வெற்றி
என்னை வெறுப்பார் யார் இங்கே
என்னை துறப்பார் யார் இங்கே
பொய்யும் வஞ்சகமும் கொள்வார்
வன் செயல்கள் புரிவார்
என் பொறுமையும் விட்டுகொடுத்தலும்
படிக்காதவன் என்கிற பட்டத்தையும்
முட்டாள் என்கிற பெயரையும்
என் தலையில் சுமையாக விட்டு செல்கிறது
இதை நுண் அறிவால் உடைக்கிறேன்
துணை சிறகால் பார்க்கிறேன்
உனக்காக தான் உன்
சுமைகளை தாங்கிக்கொண்டு
சுமை தாங்கியாய்
தனிமையில் காத்து நிற்கிறேன்..
என் கால்களை வாரி விடாதே
நீயும் சரிவாய்
என்னுடன்
பருவ தாகம் எனக்கில்லையா
பருகி பார்க்க அனுமதித்தால்
தான் என்ன?
பாவை பஞ்சத்தை காட்டாதே
பால் மனம் எனக்கு
பயப்படாதே
பாய்ந்துவிட மாட்டேன்
பாசத்தை பரிசலிப்பேன்
பத்திரமாக பார்துகொள்வேன்
என்னால் அவர் தலைசாய்த்து நோக கூடாதென்று
என்னிடம் கடன் பெற்றவரை கண்டு
கண்டுக்காமல் ஒதுங்கி செல்கிறேன்
அவர் தரும்போது தரட்டுமென்று