ஆயிரம் ஆண்டு கால
அடிமை தனத்தை உடைக்க
வந்திருக்கிறேன்
ஆசைக்கு அடிபணிய மாட்டேன்
ஆணவத்தை விட்டுவைக்க மாட்டேன்
ஆட்டிபடைப்பேன்
ஆட்சிகள் செய்வேன்
ஆயிரம் ஆண்டு கால
அடிமை தனத்தை உடைக்க
வந்திருக்கிறேன்
ஆசைக்கு அடிபணிய மாட்டேன்
ஆணவத்தை விட்டுவைக்க மாட்டேன்
ஆட்டிபடைப்பேன்
ஆட்சிகள் செய்வேன்
வெயில் தொட்ட தேகம்
வேஷமிடா குணம்
வேதனைகள் தாண்டி
பாய காத்திருக்கும் மனம்
இது வெல்லும் வேங்கை
துன்பத்தை காட்டு
துடைத்து விடுகிறேன்
கோபத்தை காட்டு
வாங்கிக்கொள்கிறேன்
புறக்கணிப்பை காட்டு
தாங்கிக்கொள்கிறேன்
துரோகத்தை மட்டும் காட்டாதே
தும்சம் செய்துவிடுவேன்.
குளிர்ந்த நீரில் குளி
அன்பானவர்களை சந்தித்து மகிழ்
புதிய இடங்களை பார்
மிகை சிந்தனை கொள்ளாதே
சிந்தனைகளை படைப்பாக்கு
சாதனைகளை உருவாக்கு
என்னை யாரும்
நேசிக்கவும் வேண்டாம்
அங்கீகரிக்கவும் வேண்டாம்
என்னை நானே
நேசித்து அங்கீகரித்து கொள்கிறேன்