ஆயிரம் கத்திகள் முதுகினிலே
தாமரை மலர்கள் கைகளிலே
காகங்கள் கரைக்குது காதினிலே
கால்கள் மிதக்குது கப்பலிலேயே
ராகங்கள் தாவுது நாவினிலே
ரணங்கள் ஆறுது இதயத்திலே
கடவுளை கல்லில் தேடாதே
கல் நெஞ்சை உடைத்து பார்
உன் உள்ளே தெய்வம்
அன்பெனும் கருணை வடிவாக தெரியும்
உள்ளத்தால் உடல் காத்து கிடக்கிறது
உடல் உருகிகொண்டு இருக்கிறது
உடல் மொழி ஊடல் மொழி
உணர்வுகள் உள்ளத்தை
உந்துகிறது
காதல் காம உணர்வுகள்
உள்ளத்தை ஊசியால் தைக்கிறது
புகழ் சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியாது
பழி சுமக்கும் நபரால் பிழை திருத்த முடியும்
புகழ் தற்பெருமை தலைகனம் கொள்ள செய்யும்
இகழ் தன்நலம் பாராமல் திருத்தம் மேற்கொள்ள செய்யும்.
ஆட்டம் ஆடும் வரை தான் மரியாதை
அடிபட்டு கிடந்தால்
அய்யோ பாவம் என கடந்து செல்வார்கள்
அப்பொழுதும் அன்பே துணை நிற்கும்
அரவணைக்கும்
நயவஞ்சகத்தால் வெல்வது சாமர்த்தியமல்ல
துரோகத்தால் வெல்வது வெற்றியல்ல
நீதி நியாய தர்மத்தின் படி வெல்வதே வெற்றி
என்னை வெறுப்பார் யார் இங்கே
என்னை துறப்பார் யார் இங்கே
பொய்யும் வஞ்சகமும் கொள்வார்
வன் செயல்கள் புரிவார்
என் பொறுமையும் விட்டுகொடுத்தலும்
படிக்காதவன் என்கிற பட்டத்தையும்
முட்டாள் என்கிற பெயரையும்
என் தலையில் சுமையாக விட்டு செல்கிறது
இதை நுண் அறிவால் உடைக்கிறேன்
துணை சிறகால் பார்க்கிறேன்
உனக்காக தான் உன்
சுமைகளை தாங்கிக்கொண்டு
சுமை தாங்கியாய்
தனிமையில் காத்து நிற்கிறேன்..
என் கால்களை வாரி விடாதே
நீயும் சரிவாய்
என்னுடன்
பருவ தாகம் எனக்கில்லையா
பருகி பார்க்க அனுமதித்தால்
தான் என்ன?
பாவை பஞ்சத்தை காட்டாதே
பால் மனம் எனக்கு
பயப்படாதே
பாய்ந்துவிட மாட்டேன்
பாசத்தை பரிசலிப்பேன்
பத்திரமாக பார்துகொள்வேன்
என்னால் அவர் தலைசாய்த்து நோக கூடாதென்று
என்னிடம் கடன் பெற்றவரை கண்டு
கண்டுக்காமல் ஒதுங்கி செல்கிறேன்
அவர் தரும்போது தரட்டுமென்று
முயற்சிக்கும்
முனைப்புக்கும்
திறமைக்கும்
கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்
தொடர்ந்து செல்லுங்கள்
தோல்விகளை உடையுங்கள்
வெற்றி பெறுங்கள்
என் விடுமுறை வாழ்வின்
நீட்டிப்பு அவள்
அவளே என் நித்திய விடுமுறை
விதிகள் ஏதுமில்லை அவளிடம்
விடுமுறை வாசலை தவிற
பைகுள்ள பணமில்லை ($)
பாசத்துக்கு பஞ்சமில்லை
பங்குபோட யாருமில்லை
பஞ்சாங்கம் பார்ப்பதில்லை
பஞ்ச வர்ணம் கொள்வதில்லை
{பகை கொள்வதில்லை}
பரலோகம் போவதில்லை
பகுத்தறிவு வெறுப்பதில்லை
பாசாங்கு செய்வதில்லை
Cc6906
தண்ணி ஊத்து
தாகம் தீர்க்கவில்லை
தனிமையில் தவிக்கிறேன்
தாகத்துல
நான் சொல்லும் கதையில் சோகமில்லை
நான் சொல்லாத செய்தியில
சுகமுமில்லை
மக்கள் திறமைக்கு தான்
கைகொடுப்பார்களே தவிர
பெருமைக்கு அல்ல
+++++++
மக்கள்
திறமைக்கு தான்
கை தட்டுவார்களே தவிர
பெருமைக்கு அல்ல
நுண்ணுயிர்கள் உருவாக்கிய
பெரு உயிர் நாம்
இதில் காதல் காம உணர்வு
உயிர்களின் பரிணாம வளர்ச்சியின் அடையாளம் .
உயிர் உதிரும் உடல் உதிரும்
உள்ளம் உதிருமா ?
எந்தெந்த வடிவத்தில் சாத்தியமோ
அந்தந்த வடிவத்தில்
நான் உன்னுடன் வாழ்கிறேன்
தொடர்ந்தேன் தொடர்கிறேன் தொடர்வேன்
(தொடுவேன் தொடுப்பேன் தொடுத்தெடுப்பேன்)
காதலை காத்திருக்க வைக்காதே
காலம் காத்திறாது
காதலை காலாவதி செய்துவிடும்
காலமெல்லாம்
காதல் வாழும்
நாம் வாழ்வோமா?
மனம் தவிக்கிறது
கொதிக்கும் உலை போல
உன் மவுனம் என்னை கொல்கிறது
குளிர் நீர் கண்களில் வழிகிறது
உனக்காக காத்து நிற்கிறேன்
நீயே நீதியே நிவாறினி
ஆயிரம் பொய்கள் பூசி மொழுகினாலும்
நெஞ்சில் உள்ள சத்திய ஜோதி
ஒருபோதும் அழியாது
அது எகிறி குதித்து
வெளியே வரும்
நீதி ஒளியாக
கர்ம வினையாக
வேண்டியவை அடைந்ததும்
பசித்தவர் பசியாரும்
ருசி வேண்டுபவர் பசி ஆறாதே
+++++++
குறள் வடிவில்
வேண்டியன அடைந்ததும்
பசித்தவர் பசியாரும்
ஆறாதே ருசி வேண்டுபவர் பசி
என்னைப்போல் ஒருவன்
எனக்கு கிடைக்கவில்லை
என்னை தேற்றுவதற்கு
என்னை ஆற்றுவதற்கு
நான் என்னை தேடுகிறேன்
அறிவால் என்னை அரவணைத்து கொள்
அன்பால் என்னை தழுவிகொள்
அமைதியாக வந்து என்னை ஆட்கொண்டு விடு
யாரும் வேண்டாம்
எதுவும் வேண்டாம்
என்று
வாழும் வாழ்க்கையில்
(நான் ஏன் பொறாமை
கொள்ள வேண்டும்)
பொறாமைக்கு இடமேது..
நீ விடும் மூச்சு காற்றில்
உன் மனதை அறிந்துவிடுவேன்
அறிந்தும்
அறியாதவன் போல
அமைதியாக இருக்கிறேன்
சாதி என்பது தொழில் பிரிவுக்காக தொடங்கபட்டது மட்டுமே அதை பிறப்போடு தொடர்புபடுத்தி அதன் மூலம் உறவும் பந்தமும் கொள்வதும் வெறிபிடித்து அலைவதும் மடமை
நீ சொன்னால் நான் காத்திருப்பேன்
நான் சொன்னால் நீ காத்திருப்பாய்
நாம் சொன்னால் காலம் காத்திருக்குமா?
காதலில் ஏமாற்ற தான்
ஆயிரம் காரணம் வேணும் ..
உண்மையாக காதலிக்க ஒரு காரணுமும் தேவையில்லை
It will go like a flow
என்னுடைய GF என்ன பண்ணுவான்னா ..
ஒருநாள் அவங்க வீட்டில்
அவங்க அம்மா அடுத்த அறையில் இருக்கும் போது
கத்தியை எடுத்து இடது கை மணிக்கட்டில் வைத்து கொண்டு..
LOVE பண்றியா இல்லையா என்றாள்..
சரி OK என்று பேசி கொண்டே
கத்தியை பிடுங்க போய் என் கையை கிழித்து விட்டாள்..
இப்படி தான் என்கிட்ட நடந்து கொள்வாள்..
அவங்க அம்மாவை வைத்து கொண்டே கேட்பாள்
அப்போ கொடுத்த PROMISE
இப்ப எனக்கு இவ்வளவு HEAD INJURY இருக்கு..
LIFE RISK இருக்கு ..
என்னிடம் 3 ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறாள்..
Every time is precious for me.
கடைசியாக அவளுக்கு தெரிந்த நபரிடம்
என்னை யார் என்றே தெரியாது..
தொல்லை பண்றான் என்று சொல்லிவிட்டு
பிரச்சனையை கிளப்பிவிட்டு சென்றுவிட்டாள்..
காதலை சுமந்து கொண்டு
விடுமுறை நாட்களில்
எங்க வீட்டை சுற்றி சுற்றி வருகிறாள்..
அவளுடன் பணி புரியும் அனைவருக்கும் என்னை தெரிகிறது..
பள்ளியில்,கல்லூரியில் படித்த அனைவருக்கும் என்னை தெரியும்..
நான் வாசல் திறந்து தான் கிடக்கிறது..
வருவது என்றால் வா என்று தான் இருக்கிறேன்..
++++++
நாங்க இரண்டு பேரும் 15 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்து இருப்போம்..
அவங்க அம்மா தான் ..
அவன் கீழ் சாதி என்று
சாதியை மேற்கோள் காட்டி..
சேரவிடாமல் செய்தார்..
பிறகு பல இன்னல்கள் கடந்து
இவளை உயர்த்தி சிவில் சர்விசில் பதவியில் வைத்து இருக்கிறேன்.
அது தான்
நான் அவளுக்கு கொடுத்த பெரும் தண்டனை..
இப்ப காலம் அவளை என்னிடம் அழைத்து வரும் பாருங்க..
அவங்க அம்மா முன்பு
திருமணம் செய்ய வேண்டும்..
சாதியாவது மயிராவது..
(சுருக்கமாக நடந்ததையும் நடக்க போவதையும் சொல்லியுள்ளேன் , சொல்லிட்டு செய்யனும் இல்லையா ? )
நான் 20 ஆண்டுகளாக முடிக்காமல் வைத்து உள்ள டாஸ்க் களில் இதுவும் ஒன்று ..
Time has arrived