ஆயிரம் கத்திகள் முதுகினிலே
தாமரை மலர்கள் கைகளிலே
காகங்கள் கரைக்குது காதினிலே
கால்கள் மிதக்குது கப்பலிலேயே
ராகங்கள் தாவுது நாவினிலே
ரணங்கள் ஆறுது இதயத்திலே
கடவுளை கல்லில் தேடாதே
கல் நெஞ்சை உடைத்து பார்
உன் உள்ளே தெய்வம்
அன்பெனும் கருணை வடிவாக தெரியும்
உள்ளத்தால் உடல் காத்து கிடக்கிறது
உடல் உருகிகொண்டு இருக்கிறது
உடல் மொழி ஊடல் மொழி
உணர்வுகள் உள்ளத்தை
உந்துகிறது
காதல் காம உணர்வுகள்
உள்ளத்தை ஊசியால் தைக்கிறது