வயது ஆக ஆக தான்
விளங்கும்
நமக்கு கிடைக்காமல் போன
வாய்ப்புகள் எல்லாம்
வரமென்று
கெஞ்சுவதை அஞ்சுவதை நிறுத்து
வதைகள் பட்டாலும்
கதைகள் சுட்டாலும்
பஞ்சு போல போசுங்காதே
நஞ்சே உண்டாலும்
நெஞ்சுரம் கொள்
நீ யாருக்கும் அடிமை இல்லையென
இந்த காதல் படுத்தும் பாடு
பித்து நிலையை கடந்ததாக உள்ளது
காத்திருந்து காத்திருந்து
காதில் ரத்தம் வருகிறது
மூளை நரம்புகள் வெடித்து
முடியுமா மவுனம் என்று
ஏங்குகிறது இதயம்
புற காதல் தோற்றுப்போகும்
அக காதல் அழியாது
புற காதலுடன் முடிந்த உறவுகள்
அக காதல் தொடங்கியதும்
புறத்தில் அன்பாய் சங்கமிக்கும்