இவன்(ள்-ர்) தான் நான் சொன்ன அவன்
என்கிற அறிமுகம்.
எவன் நான் அவன்
என்கிற என் உள்மன சந்தேக கேள்வியோடு
அறிமுகப்படுத்தப்பட்டு
போலி புன்முறுவலுடன்
அறிமுகமாகிறேன்
அனுமதியின்றி
புற கண்களின் வழி நுழைந்தாய்
அக குடிலில் குடிகொண்டு
பிராண சுவாசத்தின் வழி கலந்துரையாடுகிறாய்
யார் நீ ? நிஜத்தில் எனக்கு தெரியவில்லை
பார்... நீ என் அகத்தில்
பிஞ்சில் கலை நிகழ்ச்சிகளுக்காக (பிஞ்சு வயதில்)
மையால் வரைந்த கிடா மீசையும்
தலையில் தலைபாகையாக கட்டிய தாவணியும்
இரவலில் வாங்கி பூசிய உதட்டு சாயமும்
இன்னும் இனிக்கிறது மனதில்
கண் நேர் நோக்காமல்
காதல் மொழிகளை கண்டுகொள்ளாமல்
காமத்து சீண்டல்களுக்கு ஈடுகொடுக்காமல்
கடைக்கண் பாரவையால்
(காலம் கழிக்காமல்)
கன்னி மனதை களவுக்கொள்ளாமல்
காற்றாய் கடந்து சென்றவன்
பார்க்கும் தொலைவில் மட்டும் (இன்பம்) ----------------- இணையில்லா துருவங்களை இணைக்கும் காதல்கள் காவியங்கள் கவிதைகள் கண்ட வெளி தோற்றம் அண்டவெளி மிதவைகள் கோள்களாக