நான் நல்லவன் என்றாலும்
நரிகள் விடாது
நாலு பக்கமும் பார்த்து
நாசுக்காக வரும் நரிகளின்
நாடி துடிப்பை நிறுத்த வேண்டும்
இது
நாடு அல்ல நரிகளின் காடு
+++++++
காட்டு விதியில் குணமேது
பசித்தால் வேட்டையாடு
பாய்வதை புசித்து உண்ணு
வலியது வெல்லும்
நான் நல்லவன் என்றாலும்
நரிகள் விடாது
நாலு பக்கமும் பார்த்து
நாசுக்காக வரும் நரிகளின்
நாடி துடிப்பை நிறுத்த வேண்டும்
இது
நாடு அல்ல நரிகளின் காடு
+++++++
காட்டு விதியில் குணமேது
பசித்தால் வேட்டையாடு
பாய்வதை புசித்து உண்ணு
வலியது வெல்லும்
ஆயிரம் ஆண்டு கால
அடிமை தனத்தை உடைக்க
வந்திருக்கிறேன்
ஆசைக்கு அடிபணிய மாட்டேன்
ஆணவத்தை விட்டுவைக்க மாட்டேன்
ஆட்டிபடைப்பேன்
ஆட்சிகள் செய்வேன்
வெயில் தொட்ட தேகம்
வேஷமிடா குணம்
வேதனைகள் தாண்டி
பாய காத்திருக்கும் மனம்
இது வெல்லும் வேங்கை
துன்பத்தை காட்டு
துடைத்து விடுகிறேன்
கோபத்தை காட்டு
வாங்கிக்கொள்கிறேன்
புறக்கணிப்பை காட்டு
தாங்கிக்கொள்கிறேன்
துரோகத்தை மட்டும் காட்டாதே
தும்சம் செய்துவிடுவேன்.
குளிர்ந்த நீரில் குளி
அன்பானவர்களை சந்தித்து மகிழ்
புதிய இடங்களை பார்
மிகை சிந்தனை கொள்ளாதே
சிந்தனைகளை படைப்பாக்கு
சாதனைகளை உருவாக்கு
என்னை யாரும்
நேசிக்கவும் வேண்டாம்
அங்கீகரிக்கவும் வேண்டாம்
என்னை நானே
நேசித்து அங்கீகரித்து கொள்கிறேன்
வர்த்தகத்திற்கு உருவாக்கப்பட்ட மொழி
ஹிந்தி
ஆன்மீகத்துக்கு உருவாக்கப்பட்ட மொழி
சம்ஸ்கிருதம்
அனைத்திற்கும் உயிர் மொழி
தமிழ்
ஒன்றே ஒன்று
தொடக்கம் ஒன்று
தொடர்பில் ஒன்று
அதில் பெருக்கல் ஒன்று
அண்டசராசாரம் அனைத்தும் ஒன்று
நாம் ஒன்று
நம்முள் இறை ஒன்று
நம் இயக்கம் ஒன்று
என்/உன் மனதில்
கவலைகளை விதைத்துவிட்டு
மகிழ்ச்சியை நீ அறுவடை
செய்யலாகாது
மகிழ்ச்சியை விதை
அமைதியை விதை
புராணங்களை புறம் தள்ளு
கல்வி கற்று கொள்ளு
காசை ஈட்டி கொள்ளு
காலம் யாருக்கும் காத்திராது
புரிந்து கொள்ளு
மனித நேயத்திற்கு
தடை போடும்
மடைகளை உடை
படை இன்றி
சண்டை இல்லா
விடை இதுவே
கொடை நேசதிற்க்கு
உன் அகமாக நான் இருக்க
என் முகமாக நீ இரு
உன் குரலாக நான் ஒலிக்க
என் எண்ணமாக நீ இரு
உன் பாதையாக நான் இருக்க
என் பார்வையாக நீ இரு
பூவுக்குள் புவியுள்ளது
அகத்துகுள் அண்டமுள்ளது
ஆற்றல் அதில் உள்ளது
அணுக்கள் ஆள்கிறது
அகிலமும் அதில் அடங்குகிறது
தொடர் தொடர்புகள் (தொடர்கிறது)
(இதில் உள்ளது)
கெஞ்சுவதை அஞ்சுவதை நிறுத்து
வதைகள் பட்டாலும்
கதைகள் சுட்டாலும்
பஞ்சு போல போசுங்காதே
நஞ்சே உண்டாலும்
நெஞ்சுரம் கொள்
நீ யாருக்கும் அடிமை இல்லையென
இந்த காதல் படுத்தும் பாடு
பித்து நிலையை கடந்ததாக உள்ளது
காத்திருந்து காத்திருந்து
காதில் ரத்தம் வருகிறது
மூளை நரம்புகள் வெடித்து
முடியுமா மவுனம் என்று
ஏங்குகிறது இதயம்
புற காதல் தோற்றுப்போகும்
அக காதல் அழியாது
புற காதலுடன் முடிந்த உறவுகள்
அக காதல் தொடங்கியதும்
புறத்தில் அன்பாய் சங்கமிக்கும்