காதல் பூக்கள் பூக்கும்
நினைவு சாலை எங்கும்
கவிதை மழையில் வெள்ளம்
மெல்லிசையில் கரையும் உள்ளம்
காதல் பூக்கள் பூக்கும்
நினைவு சாலை எங்கும்
கவிதை மழையில் வெள்ளம்
மெல்லிசையில் கரையும் உள்ளம்
அகந்தையும் அகங்காரமும்
விட்டுக்கொடுத்தலை கெடுக்க
காதலற்று காமமற்று
உள்நெஞ்சில் போர் தொடுக்க
அறுதலுக்கு புது உறவை நாடி
ஆற்று வெள்ளத்தில் துடுப்பற்று ஓடி
கரை சேர்ந்தால் போதும்
என்கிற நிலையில்
இன்றைய நிச்சயமற்ற உறவுகள்.
இதயத்தை
அவளும் பறித்தாள்
இவளும் பறித்தாள்
இன்பத்தை
இவளும் பகிரவில்லை
அவளும் பகிரவில்லை
சுயநலம் பிடித்தவள்கள்
😂😎
மனதின் நெருக்கத்தில்
சந்திக்கும் துடிப்பில்
வாய்ப்பின்மையின் தவிப்பில்
எதிர்பார்ப்பின் ஏக்கத்தில்
தொடரும் காதல்