பசி பிணி
இடர் தொடர்
நேர்ந்தாலும்
வாழ்வை சாய்ந்தாலும்
நன்மையில் நாட்டம் கொள்
நாள்பொழுதில்
நாடே நாடி வரும்
நன்மைகள் கூடி வரும்
பசி பிணி
இடர் தொடர்
நேர்ந்தாலும்
வாழ்வை சாய்ந்தாலும்
நன்மையில் நாட்டம் கொள்
நாள்பொழுதில்
நாடே நாடி வரும்
நன்மைகள் கூடி வரும்
பல்வேறு கண்ணீர் துளிகளும்
சிறு சிறு மகிழ்வும்
நிறைந்தது தான் வாழ்க்கை
மனதை குழந்தையாக மாற்று
நீங்காத நினைவே கூற்று
எண்ணத்தை ஆற்று
+++++++++++
கள்ளிச்செடியும் கண்கலங்கியது
என் கதை கேட்டு
காதல் கொடி ஏற்றாமல்
காலம் கடந்தபின்பும்
காதலி கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடுகிறாள்
++++++
காலம் கடந்த பின்பும்
காதல் கொடி ஏற்றாமல்
காதலி கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடும் கதை கேட்டு
கள்ளிச்செடியும் கண்கலங்கியது
உடலே உடைந்தாலும்
உயிரே ஊசலாடினாலும்
உள்ளம் உடையாமல் ஓடும்
அடங்காமல் ஆடும் ஆட்டை அடிக்கும்
இது வேங்கையின் வேட்டை
தன் குழந்தை தாய் பால் குடிக்க
அன்னை விலை பேசுவதில்லை
அரசு கல்விக்கு விலை பேசுவதா ?
அறிவு பால் கொடுப்பது அரசின் கடமை இல்லையா?
வாங்கிய தாலி நஞ்சு போச்சி
மஞ்சள் கருகி போச்சி
காத்திருப்பு காலம் பெருகி போச்சி
கன்னியாய் மனம் காஞ்சிப் போச்சி
வீட்டை.மறந்தான்
ஊரை மறந்தான்
நாட்டை மறந்தான்
நாடு கடந்தவன்
என்றில்லாமல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
சொந்த நாட்டுக்கு பெருமை சேரு
இருக்கும் காதலை
இயன்றவரை இயக்காமல்
இணையாமல் இசைக்காமல்
காலம் கடத்தி
காத்திருப்பை காதலென
இழுத்து கொல்லும்
இல்லாத காதல்கொள்ளும்
இயலாதவர்கள்
ஆழமானது
அமைதியானது
அடிமை செய்யாதது
ஆசையை ஆற்றுவது
ஆள வைப்பது
அரவணைப்பது
அர்பணிப்பது
அன்பானது
ஆத்மார்த்தமான காதல்
குடியரசு நாட்டை காப்பவனுக்கு
குருவி கூட்டை காக்க தெரியாதா ?
பணிந்து செல்பவனை
பார்த்து பயந்துவிட்டதாக கருதாதே
பலரை பார்த்தவனுக்கு
பாய தெரியாதா ?