ஒருவரோடு ஒருவர்
ஒன்றாமல்
ஒற்றை உள்ளம்
ஓரமாய் ஓசையின்றி ஒளிவுமறைவாக
ஒத்து போகுமோ போகாதோ
என்ற சந்தேகத்தில்
சற்றே ஒதுங்கிய நிலையில்
உள்ளுக்குள் குமுருவதே
ஒருதலை காதல்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காண வழியுமின்றி
காலம் கொண்டு சென்றவர்களையும்
கைவிட்டு சென்றவர்களையும்
காதலித்து காலம் கரைப்பதும்
ஒருதலை காதல் தான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தனக்குள் தோன்றிய காதல்
தன்னை ஆட்கொண்டு கையாள்வதால்
தன்னையன்றி வேறு யாரும்
புரிந்துகொள்ளவோ
புறந்தள்ளவோ
முடியாது
=================================================================
காதல் கூட தோற்று போகும்
ஒருதலை காதல் ஒருபோதும்
தோற்று போவதில்லை
காதல் கூட பொய்யாகும்
ஒருதலை காதல் ஒருபோதும்
பொய்யாகாது
பாலினமற்றது பாரபட்சமற்றது
++++++++++++++++++++
(நான்கு கவிதைகள் ஒரே தலைப்பின் கீழ் , ஒன்று சேர்த்தாலும் தகும் அல்லது தனித்தனியாக (ஒருதலையாக) பிரித்தாலும் பொருள் தரும் )
***********************
சிலருக்கு மொழிமீது காதல்
சிலருக்கு சாதியின் மீது காதல்
சிலருக்கு மதத்தின் மீது காதல்
மாறாக அவைகள் உங்களை காதலிக்க போவதில்லை என்று தெரிந்தும்.
கொள்கிறிர்கள் ஒருதலையாய் அதன்அதன்மீது காதலை

No comments:
Post a Comment